புலிகள் கொலையாளிகள் என்றால் -அவர்கள் உருவாக்கிய கட்சியில் சம்பந்தர் ,சுமந்திரன் இருப்பது ஏன் …?

Spread the love

புலிகள் கொலையாளிகள் என்றால் -அவர்கள் உருவாக்கிய கட்சியில் சம்பந்தர் ,சுமந்திரன் இருப்பது ஏன் …?

இலங்கையில் சிங்கள பவுத்த இனவாதிகள் நடத்திய அடக்குமுறை காரணமாக புலிகள் ஆயுத வழிக்கு செல்ல நேரிட்டது ,அதனை வடிவமைத்து வழங்கியது சிங்கள அரசுகளே .

அதன் தோற்றத்தின் பின்னால் எழுந்து விரிந்த ஆயுத போராட்டத்தின் பயனாக ,உருவாக்க பெற்றதே தமிழ் தேசிய கூட்டமைப்பு .

அந்த கூட்டமைப்பை புலிகள் ஆயுதம் வைத்திருக்கும் பொழுதே அதே புலிகளினாலே ,சிங்கள அரசுகளுக்கு வால்பிடித்து சகோதர

படுகொலைகளை நடத்திய தமிழ் குழுக்கள் ஒன்று இணைக்க பட்டு உருவாக்க பட்டது .

புலிகளினால் அவர்கள் மன்னிக்க பட்டு ,ஒன்று பட்டு செயல் ஆற்ற அழைக்க பட்டனர்


அவ்விதம் உருவான கூட்டமைப்பு தலைவராக சம்பந்தன் நியமிக்க பட்டார் .

அவ்வேளை சுமந்திரன் சிங்கள பால்குடித்து திரிந்தார் .அப்போது புலிகள் தொடர்பாக இந்த சிங்கள பால்குடி சுமந்திரன் எதுவும் பேசவிலை

இப்பொழுது தமிழ் தேசிய பிரச்சனைக்கு தீர்வு காணப் போவதாகவும் ,அதனை இவர் வென்றிட போவதுமாக குறிப்பிடுகின்றார் .

இதே சில மாதங்களுக்கு முன்னர் புலிகளினால் ஆயுதம் மூலம் பெறமுடியாத தீர்வை நாம் எப்படி பெற முடியும் என இதே சூத்து மாத்து சுமந்திரன் தெரிவித்தார் .

அப்படி என்றால் தமிழர்கள் தலையில் மிளகாய் அரைக்கும் செயலுடனேயே சுமந்திரன் சம்பந்தர் அலைகின்றனர்

அரசு வழங்கிய முப்பது கோடிரூபா ஆடம்பர மாளிகையில் சுகம் அனுபவிக்கும் சம்பந்தர் ,அவருக்கு செல்ல பிள்ளையாக அவரை

சிங்களத்திடம் உதவிகள் பெற்று கொடுக்கும் சுமந்திரன் உள்ள போது
என்ன செய்திட முடியும் …?

இப்பொழுது மானமுள்ள தமிழர்கள் இந்த கூட்டமைப்பை ஒருமுறை தோற்கடியுங்கள் அதன் பின்னரே இவர்கள் செயல்பாடுகள் தெரிய வரும்

சுமந்திரன் ,சம்பந்தன் போட்டியிடும் பகுதிகளில் அவர்களை முற்றாக தோற்கடிக்க வேண்டு அப்பொழுதே தமிழர்கள் தமது

செயல் இலக்கு நோக்கி நகர முடியும், தவறின் இந்த சுமந்திரன் ,சம்பந்தர் தமிழர்களை முட்டாளாக்கி நகர்வதை எவராலும் தடுத்திட முடியாது

இவ்வேளை ஒன்று பட்டு தமிழர்கள் எழுந்து செயல் பட வேண்டும் ,சுமந்திரன் ,சம்பந்தர் ஆகியோரை தோற்கடிப்பதன் ஊடாகவே


எமது இறைமையை காப்பாற்றி கொள்ள முடியும் ..தமிழர்களே நீங்கள் தயாரா ..? தோற்கடிப்போம் இந்த கயவர்களை .

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *