பாலஸ்தீன மக்கள் 130பேர் படுகொலை
பாலஸ்தீன மக்கள் 130பேர் படுகொலை, பாலஸ்தீனம் ஹாசாப் பகுதியில் இஸ்ரேல் அரச இராணுவம் நடத்திவரும் அகோர தனமான தாக்குதலில் கடந்த 48 மணித்தியாலத்தில் 130க்கு மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் பலியாகியுள்ளனர் .
நூற்றுக்கு மேற்பட்டவர்கள் படுகாயமடைத்துள்ளதாக ஹாசா செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இடைவிடாது தொடரும் இத்தில் தாக்குதலினால் அப்பாவி பொதுமக்கள் நாள்தோறும் படு கொலை செய்யப்பட்டு வருகின்றனர் .
இந்த மனித படுகொலையை தடுத்து நிறுத்த முடியாத நிலையில் ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட உலக நாடுகள் கண்முடி மவுனம் காக்கிறது .
மக்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதல் ஒரு இனஅழிப்பு எனவும் திட்டமிடப்பட்ட இனப்படுகொலை ராணாவும் உலக நாடுகளில் உள்ள மனித உரிமை ஆர்வலர்கள் தன்னார்வ நிறுவனங்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர் .
இஸ்ரேலிய இராணுவம் நடத்தி வருகின்ற இந்த இனப்படுகொலை தொடர்பான நடவடிக்கைக்கு எதிராக, இதுவரை நீதிமன்றத்தினால் நடவடிக்கை எடுக்க முடியாத நிலை காணப்படுகிறது.













