நுவரெலியாவில் மரக்கரி உற்பத்தியில் வீழ்ச்சியினால் விலை அதிகரிப்பு நடபாதை விற்பனையாளர்கள் பாதிப்பு

Spread the love

நுவரெலியாவில் மரக்கரி உற்பத்தியில் வீழ்ச்சியினால்
விலை அதிகரிப்பு நடபாதை விற்பனையாளர்கள் பாதிப்பு

மலையகத்தில் தொடர்ந்து மூன்று மாதங்களாக பெய்து வந்த மழை காரணமாக மரக்கரி உற்பத்தியில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டு உள்ளது.

நுவரெலியா விஷேட பொருளாதார மத்திய நிலைய மொத்த விலையில் இன்று (14) கோவா 125.00 – 130.00 சலாது 110.00 கொத்தமல்லி 320.00 கரட் 420.00 லீக்;ஸ் 290.00 – 180.00 பீட்ருட்

110.00 கிழங்கு 160.00 தொடக்கம் முள்ளங்கி (இராபு) 70.00 பூ.கோவா 1100.00 போன்ற மொத்த விலையில் காணப்படுகின்றது.

இதனை கொழும்பு தம்புல பிரதேசங்களில் உள்ள பொருளாதார மத்திய நிலையங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து அவை நுகர்வோருக்கு சில்லரை

விலையில் கிடைக்கும் சந்தர்பத்தில் மரக்கரிகளின் விலை எவ்வாறு இருக்கும் என்பதை கொள்வனவாளர்களே தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.

அன்மையில் பெய்த மழை காரணமாக பெரும்பாலான இடங்களில் வெள்ளத்தினால் மரக்கரிகள் பாதிப்பிற்கு உள்ளானது. மரக்கரி தோட்ட தொழிலாளர்களுக்கும்

தோட்டங்களில் தொழில் செய்ய முடியவில்லை. தொடர்ந்து பெய்த மழை காரணமாக விவசாய மண் கழிதன்மை அடைந்தமையினால் மரக்கரிகளின் வளர்;ச்சி விகிதம்

நுவரெலியாவில் மரக்கரி உற்பத்தியில் வீழ்ச்சியினால் விலை அதிகரிப்பு நடபாதை விற்பனையாளர்கள் பாதிப்பு

குறைவடைந்துள்ளது. விவசாய நிலங்களுக்கு போடப்பட்ட சேதன மற்றும் அசேதன உரங்கள் வெள்ளத்தில் அடித்து

செல்லபட்டுள்ளது. ஏற்கனவே போடப்பட்ட சில மரக்கரிகள் மழை கராணமாக அழுகியுள்ளன.

இதனால் தற்போது வங்க கடன் பெற்று விவசாய நடிவடிக்கைகளில் ஈடுப்பட்டோர் பெரிதும் பாதிப்பு அடைந்துள்ளனர். இதனை நம்பி வாழும் ஆயிரகரக்காண

தொழிலாளர்களும் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர். குறிப்பாக மரக்கரி உற்பத்தியில் சிறிய நடுத்தர மற்றும் பாரிய தோட்டங்களில் பல ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயம்

செய்பவர்கள் பலர் இங்கு இருக்கின்றனர். இவர்களின் நிலை தற்போது கேள்வி குறியாகி உள்ளது. விவசாத்தை நம்பி

வட்டிக்கு பணம் வாங்கியவர்களும் வாகனங்களை வாடகைக்கும் தவணை கட்டண முறையில் கொள்வனவு செய்தவர்களும் பாதித்து உள்ளனர்.

இந் நிலையில் மரக்கரி உற்பத்தியில் ஈடுப்பட்டோரும் விற்பனைகளில் ஈடுப்பட்டோரும் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். நுவரெலியா விஷேட பொருளாதார

மத்திய நிலையத்திற்கும் போதுமான அளவில் மரக்கரிகள் வராததினால் ஏனைய பிரதேசங்களுக்கு அனுப்ப முடியாமலும் இருக்கின்றது. மரக்கரி உற்பத்தியாளர்களின்

வருகையும் குறைந்துள்ளது. இந்துறையில் வீதியோரங்களிலும் சிறிய கடைகளிலும் சுயதொழிலாக மரக்கரி விற்பனையில் ஈடுபட்டவர்களும்

பாதிப்படைந்துள்ளனர். வாகனங்களில் வருவோர் விலையை கேட்டதும் வாங்காமல் சென்றுவிடுகின்றனர்.

இதனால் இவர்கள் கொள்வனவு செய்த மரக்கரிகளும் பழுதடைந்து வருகின்றது.

தற்போது இந்த காலநிலை மாற்றதினால் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு என்ன தான் தீர்வு. இவர்களுக்கு உரிய

நிவாரணங்கள் கிடைக்குமா அல்லது மானியங்கள் கிடைக்குமா பொருத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

நுவரெலியாவில் மரக்கரி
நுவரெலியாவில் மரக்கரி

Leave a Reply