தீயில் கருகிய மனித உடல்கள் 16பேர் மரணம் -150 பேர் காயம்

Spread the love

தீயில் கருகிய மனித உடல்கள் 16பேர் மரணம் -150 பேர் காயம்

பங்களாதேஸ் Sitakunda, துறைமுக பகுதியில் இடம் பெற்ற தீயில் கருகி 16 பேர் மரணித்துள்ளனர்
மேலும் 150 பேர் படுகாயமடைந்துள்ளனர்

கொண்டனர் தரித்து வைக்க படும் துறைமுக பகுதியில் பணியாற்றி கொண்டிருந்த பணியாளர்களே இந்த தீ விபத்தில் சிக்கி பாதிக்க பட்டுள்ளனர்

இங்கு பற்றிய தீயானது இரு கிலோ மீட்டர் அப்பாலும் வானில் புகைமண்டலங்களாக காணப்பட்டதாக நேரடி சாட்சிகள் தெரிவித்துள்ளன

இந்த தீயில் சிக்கிய மனிதர்கள் பலர் மூச்சு திணறலுக்கு உள்ளான நிலையில் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளனர் ,

இங்கு இடம் பெற்ற தீ விபத்தில் சிக்கியவர்களில் சிலர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் உயிரிழப்பு மேலும் அதிகரிக்க படலாம் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

இந்த தீ விபத்துக்குரிய காரணம் உடனடியாக தெரியவரவில்லை ,விசாரணைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது ,ஆளும் அதிபர் இந்த தீ விபத்து தொடர்பில் உடன் விசாரணைகளை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கும் படி வேண்டுதல் விடுத்துள்ளார்

பங்களாதேஷில் இவ்விதமான தீ பற்றல் சம்பவங்கள் அதிகரித்த வண்னம் உள்ளது

தீயில் கருகிய மனித உடல்கள் 16பேர் மரணம் -150 பேர் காயம்

,புடவை தொழில் சாலை ஒன்றில் இடம்பெற்ற தீவிபத்தில் அங்கு பணியாற்றிய நூற்றுக்கு மேற்பட்டவர்கள் தீயில் கருகி இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது

இந்த தீ விபத்து திட்டமிடப்பட்ட ஒன்றா அல்லது விபத்தா என்பது தொடர்பில் சில நாட்களில் தெரிய வரும் என எதிர்பார்க்க படுகிறது

தீயில் கருகிய மனித உடல்களின் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதால் ஆளும் ஆட்சியாளர்களுக்கு பெரும் நெருக்கடியை இந்த தீ சம்பவம் ஏற்படுத்தும் என எதிர் பார்க்க படுகிறது

முறையான நிர்வாகத்தின் கீழ் பேணப்படாத நிலையில் இந்த தீ விபத்துக்கள் அதிகரித்து செல்வதாக சமூக நல ஆர்வலர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர் .

கடந்த சில ஆட்சியாளர்களுக்கு எதிராக இராணுவம் இரகசிய சதி முயற்சியில் ஈடுபட்டு ஆட்சியை கவிழ்ப்பதற்கு இவ்விதமான நாசகார செயல்களில் ஈடுபட்டு வந்தமை பின் நாட்களில் கண்டு பிடிக்க பட்டு அவை சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தமை இங்கே கவனிக்க தக்கது .

  • வன்னி மைந்தன் –

    Leave a Reply