தகுதியற்ற நியமனத்திற்கு தரமான பதிலடி கொடுத்த கொழும்பு பல்கலை மாணவர்கள்!

Spread the love

தகுதியற்ற நியமனத்திற்கு தரமான பதிலடி கொடுத்த கொழும்பு பல்கலை மாணவர்கள்!


கொழும்பு பல்கலைக்கழகத்தின் “வேந்தர்” பதவிக்கு முருத்தெட்டுவே ஆனந்த தேரரை தற்போதைய அரசாங்கம் நியமித்தமைக்கு எதிராக ஆசிரியர் சங்கங்கள் மற்றும் கொழும்பு

பல்கலைக்கழகத்தின் பிரதான மாணவர் ஒன்றியம் என்பன தமது பலத்த எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தன.


அரசியல் ரீதியான திருப்திப்படுத்தலுக்கே குறித்த நியமனம் தேரருக்கு வழங்கப்பட்டதாக பலர் கூறியிருந்தார்கள்.


இந்நிலையில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா சில நாட்களுக்கு முன் நடைபெற்றது. இங்கு பட்டம் பெற வந்த மாணவர்கள் முருத்தெட்டுவ ஆனந்த தேரரிடம் இருந்து

தமது பட்டத்தை பெறாமல் அரங்கில் தமது எதிர்ப்பை பதிவு செய்து சென்றனர்.
குறித்த எதிர்ப்பை பதிவு செய்த மாணவர்கள் அனைவரும் கொழும்பு பல்கலைகழக சட்டபீடத்தை

சேர்ந்த மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். அத்தோடு பலர் உயர் நீதிமன்றத்தில்

சட்டத்தரணிகளாக சத்தியப்பிரமாணம் செய்தவர்கள் என்பதும் சிறப்பான தகவல்.
முகாமைத்துவ பீடம் மற்றும் நிதி ஆசிரியர் சங்கமும் (FMFTA) குறித்த நிகழ்வைப் புறக்கணித்துள்ளன.


தற்போதைய இனவாத அரசாங்கத்திற்கு எதிராக தமது பலமான எதிர்ப்பை துணிந்து செயலில் வெளிப்படுத்திய மாணவர்களுக்கு எமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

எம்பி சிறிதரன் இவ்விதம் பதிவிட்டுள்ளார்

    Leave a Reply