கொரனோ தொற்றிய கடற்படையினருடன் தொடர்பினைக் பேணிய அனைவரும் தனிமைப்படுத்தல்

Spread the love

கொரனோ தொற்றிய கடற்படையினருடன் தொடர்பினைக் பேணிய அனைவரும் தனிமைப்படுத்தல்

ராஜகிரியவில் உள்ள கோவிட் -19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தில் வழக்கமான

ஊடக சந்திப்பு இன்று மதியம் (28) கோவிட் -19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும்,

பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா, மற்றும் சுகாதார சேவைகள்

பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது.

“இந்தியாவின் பங்களூரில் இருந்து இன்று 28 ஆம் திகதி யுஎல்-1172 விமானத்தினூடாக 164 பேர் இலங்கை வந்துள்ளனர், அவர்கள்

அனைவரும் முப்படையினரால் நிர்வகிக்கப்பட்டு வரும் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பப்பட்ட வண்ணம்

இருக்கின்றனர்,” என்று லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் கூறினர்.

இன்று 28 ஆம் திகதி அக்கரைப்பற்றைச் சேர்ந்த 77பேர் கொண்ட மற்றுமொரு குழுவினர் பிசிஆர் பரிசோதனையின் பின்னர்

தனிமைப்படுத்தல் சான்றிதல்களுடன் தங்களது வீடுகளுக்கு சென்றனர். இவர்களில் 75 பேர் இராணுவத்தினரால்

நிர்வகிக்கப்பட்டு வரும் தம்மின்ன தனிமைப்படுத்தல் மையத்திலும் 2 பேர் பூனானை தனிமைப்படுத்தல் மையத்திலும்

தனிமைப்படுத்தப்பட்டு இருந்தனர். இதனுடன் சேர்த்து 28 தியதியளவில் மொத்தமாக 4526 பேர் முப்படையினரால்

      நிர்வகிக்கப்பட்டு வரும் தனிமைப்படுத்தல் மையங்களில் இருந்து தங்களது வீடுகளுக்கு சென்றுள்ளனர். அதேபோல்,

      அதேபோல், தொற்றினால் பாதிக்கப்பட்ட கடற் படையினரின் அனைத்து குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவர்களுடன் நெருங்கிய

      தொடர்பினை பேணிய அனைவரும் தனிமைப்படுத்தலுக்காக தனிமைப்படுத்தல் மையங்களுக்கு இன்று 28 ஆம் திகதி

      அனுப்பப்பட்டுள்ளனர்,’’ என்று லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் குறிப்பிட்டார்.

      கொரனோ தொற்றிய
      கொரனோ தொற்றிய

      Leave a Reply