கொரனோ கோரத் தாண்டவம் -அமெரிக்காவில்87 ஆயிரம் பேர் பலி

Spread the love

கொரனோ கோரத் தாண்டவம் -அமெரிக்காவில்87 ஆயிரம் பேர் பலி

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு அமெரிக்காவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 87 ஆயிரத்தை கடந்துள்ளது.

அமெரிக்காவில் மட்டும் 87 ஆயிரம் பேர் பலி – கொரோனா அப்டேட்ஸ்


கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்
நியூயார்க்:

உலகம் முழுவதும் 213 நாடுகள்/ பிரதேசங்களுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது.

தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 45 லட்சத்து 81 ஆயிரத்து 519 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 25 லட்சத்து 40 ஆயிரத்து 72 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 45 ஆயிரத்து 256 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

வைரஸ் பாதிப்பில் இருந்து 17 லட்சத்து 35 ஆயிரத்து 775 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், இந்த கொடிய வைரசுக்கு 3 லட்சத்து 5 ஆயிரத்து 672 பேர் உயிரிழந்துள்ளனர்.

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா அமெரிக்காவை

புரட்டி எடுத்து வருகிறது. கொரோனா பாதிப்பிலும், உயிரிழப்பிலும் அமெரிக்கா உலகம் அளவில் முதலிடத்தில் உள்ளது.

கொரோனாவால் அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகள்:

அமெரிக்கா – 87,303
ஸ்பெயின் – 27,459
இங்கிலாந்து – 33,998
இத்தாலி – 31,610
பிரேசில் – 14,267
பிரான்ஸ் – 27,425
ஜெர்மனி – 7,933
ஈரான் – 6,902
கனடா – 5,499
பெல்ஜியம் – 8,959
நெதர்லாந்து – 5,643

கொரனோ கோரத்
கொரனோ கோரத்

Leave a Reply