கை கால்கள் வாய் கட்டப்பட்ட நிலையில்சடலம்
கை கால்கள் வாய் கட்டப்பட்ட நிலையில் சடலம் பொலன்னறுவை, மனம்பிட்டிய – கொடலீய பாலத்திற்கு அருகிலுள்ள காட்டுப் பகுதியில் கை, கால்கள் மற்றும் வாய் கட்டப்பட்ட நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
லொரியை 30 லட்சம் பேசி வரச்சொல்லி கொலை
லொரியை 30 லட்சம் பேசி வரச்சொல்லி கொலை செய்யப்பட்டதாக தகவல்
கை,கால்கள் மற்றும் வாய் கட்டப்பட்ட நிலையில் குறித்த நபர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் பொலன்னறுவை – தலுகானை பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையவர் எனவும், டிப்பர் லொறி சாரதி எனவும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 17 ஆம் திகதி மாலை, அவரது மனைவி தனது கணவர் வீடு திரும்பவில்லை என பொலன்னறுவை பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதற்கமைய, டிப்பர் லொறியில் பொருத்தப்பட்ட ஜிபிஎஸ் தொழில்நுட்ப அமைப்பைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட பரிசோதனையில், மணல் ஏற்றி சென்ற குறித்த லொறி பொலன்னறுவை – மனம்பிட்டிய பிரதான வீதியில் பயணித்துக்கொண்டிருந்தது தெரியவந்துள்ளது.

பொலன்னறுவை – மைத்திரிபால சுற்றுவட்டத்திற்கு அருகில்
பொலன்னறுவை – மைத்திரிபால சுற்றுவட்டத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், குறித்த லொறி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், சாரதியின் சடலம் மனம்பிட்டிய கொடலீய பாலத்திற்கு அருகிலுள்ள காட்டுப் பகுதியில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேகநபர்கள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்களைக் கைதுசெய்ய மனம்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
- ஹோர்முஸ் ஜலசந்தியில் ஏற்படும் இடையூறுகள் உலகளாவிய உணவுப் பாதுகாப்பு நெருக்கடி

- இஸ்ரேலியத் தாக்குதல்களை சிரியா கண்டிக்கிறது, நிலப்பரப்பிலிருந்து வெளியேறக் கோருகிறது

- சவூதி அரேபியா அருகே அமெரிக்கா உலங்குவானூர்தி மாயம்

- ஈரான் ‘பயங்கரவாதச் செயல்களில்’ ஈடுபட்டதாக அமெரிக்காவும் அதன் பல நட்பு நாடுகளும் கூறுகின்றன

- நாமல் ராஜபக்ச ஜானகி சிறிவர்தன மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்

- ஞானசார தேரரின் துறவற ஆடையை அகற்ற வேண்டாம் என சிறைத்துறை ஆணையரை கோட்டே சங்க சபை வலியுறுத்துகிறது

- குறைந்தபட்ச எரிபொருள் கையிருப்பை பராமரிக்குமாறு நிறுவனங்களுக்கு எரிசக்தி அமைச்சு அறிவுறுத்துகிறது

- உயர் நீதிமன்ற நீதிபதிகள் இருவர் மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு நியமனம்

- சாதாரண கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு விசா இல்லாத பயணத்திற்கு இலங்கையும் தாய்லாந்தும் உடன்பாடு

- இலங்கையின் பொருளாதாரம் நெருக்கடிக்கு முந்தைய நிலையை எட்டியுள்ளது உலக வங்கி

- ஈரானின் எல்லைகளிலிருந்து அமெரிக்கப் படைகள் 1,000 கி.மீ. தொலைவிற்கு ‘தப்பி ஓடியுள்ளன

- அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், செயற்கை நுண்ணறிவில் கவனம்

- கரீபியன் கடலில் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.

- இம்ரான் கானின் ஆதரவாளர்கள் பாகிஸ்தான் தலைநகரை நோக்கி பேரணி

- சிக்கலில் இலங்கை ரயில் திணைக்களம்









