உக்கிரேனில் 31 000 ரசியா இராணுவம் படுகொலை

Spread the love

உக்கிரேனில் 31 000 ரசியா இராணுவம் கொலை

உக்கிரேன் மீது ரசியா இராணுவத்தினர் நடத்தி வரும் ஆக்கிரமிப்பு போருக்கு

எதிராக உக்கிரேனிய இராணுவம் கடும் சமராடி வருகிறது

முன்னேறி வரும் எதிரி படைகளை திணறடித்த வண்ணம் உக்கிரேனிய இராணுவம் போரிட்ட வண்ணம் உள்ளது ,உக்கிரேன் மீதான எதிரிகளின் படையெடுப்பு

மேற்கொள்ள பட்டு நூறு நாட்கள் கழிந்துள்ள நிலையில் இதுவரை முப்பத்தி ஓராயிரம் எதிரி படைகளை தாம் கொன்று குவித்துள்ளதாக உக்கிரேன் இராணுவம் அறிவித்துள்ளது

மேற்குலக நாடுகளின் ஆயுதங்களை பெற்றுக்கொண்டு தொடர்ந்து வல்லரசாக வலம் வரும் ரஷியா இராணுவத்திற்கு எதிராக நூறு நாட்கள் உக்கிரேன் இராணுவம் கடும் எதிர் சமர் புரிந்துள்ளது

இதுவரையில் உக்கிரேன் பகுதியில் எதிரி இராணுவத்தால் ஐந்தாயிரம் அப்பாவி மக்கள் படுகொலை செய்ய பட்டுள்ளனர்

மேலும் எட்டாயிரம் பேர் வரை படு காயமடைந்துள்ளனர் ,வீடுகள் அழிக்க பட்டுள்ளது ,
இழப்புக்களை எதிர் கொண்டவாறு ரசியா இராணுவம் தொடர்ந்து முன்னேறிய வண்ணம் உள்ளது

,தமது இறுதி மூச்சு இருக்கும் வரை தமது தாய் மண்ணை விட்டு கொடுக்க மாட்டோம் என உக்கிரேன் இராணுவம் எதிரி படைகளுடன் சமராடி வருகிறது

உக்கிரேனில் இடம்பெறுவது இனப்படுகொலை என உக்கிரேன் உரத்து கூறி வருகிறது ,சர்வதேச நீதிமன்றில் ரசியா நிறுத்த பட்டு தண்டிக்க படும் எனவும் ஐநா தெரிவித்துள்ளது

உக்கிரேனில் 31 000 ரசியா இராணுவம் படுகொலை

உக்கிரேனுக்கு ஆயுத உதவிகள் வழங்க படும் நாடுகளுக்கு ரசியா எச்சரித்திருந்தது

,ஆனால் அத்தனையும் மீறி பிரிட்டன்,அமெரிக்கா எண்பது கிலோ மீட்டர் சென்று தாக்கும் நீண்ட தூர ஏவுகணைகளை பல மில்லியன் டொலருக்கு வழங்கியுள்ளது

மேற்குலக நாடுகள் வழங்கும் ஆயுத உதவிகளுடன் வல்லரசாக விளங்கி வரும் எதிரி இராணுவத்தை வீழ்த்தி உக்கிரேன் இராணுவம் வெற்றி கொள்ளுமா என்பது சந்தேகமே

அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுகளை நம்பிய இராணுவ குழுக்கள் ,அதே

இராணுவத்தால் கைவிட பட்டு அழிவின் விளிம்பில் சிக்கியுள்ளதை மத்திய கிழக்கு அமெரிக்காவின் பயங்கரவாதத்திற்கான போர் பாடம் புகட்டுகிறது

அவ்விதம் உக்கிரேனும் சம காலத்தில் கைவிட பட்டு ,எதிரியிடம் மண்டியிடும் நிலைக்கு உக்கிரேன் செல்ல கூடும் என எதிர் பார்க்கலாம்

தனது பலத்தில் உள்ளவன் மட்டுமே, எதிரி முன்னேற்றம் குறித்தும்,அவன் பலம் குறித்தும் ஆழ்ந்து யோசித்து
போராடுவான் என்பது போரியல் நிலையாக உள்ளது ,

உக்கிரேன் ரசியா போர் கோடை காலத்தில் முடிவுக்கு வரும் என கூறும் எதிரியாக உள்ள ரசியாவின் கூற்று சாத்தியம் தானா என்பதை பொறுத்திருந்தது பார்க்கலாம்

உக்கிரேன் கூறும் எதிரி இராணுவத்தின் ஆயுத தளபாட மற்றும் ஆளணி அழிப்பு என்பது ரசியாவுக்கு நெருக்கடி தரும் ஒன்றாக மற்றம் பெற்றுள்ளது ,

வரும் எதிர்ப்புக்களை உடைத்து எதிரி நாட்டை தம் வசப்படுத்துவோம் என்கின்ற ரசியாவின் கனவு பலிக்குமா ..?

உக்கிரேன் ரசியா போர் எது வரை நீளும் ..?
அது சொல்ல போகும் செய்தி என்ன ..?

  • வன்னி மைந்தன் –

    Leave a Reply