ஈரான் புதிய ஏவுகணை சோதனை – அதிர்ச்சியில் இஸ்ரேல்

Spread the love

அடங்க மறுக்கும் இஸ்ரேல்- அடி கொடுக்க புதிய ஏவுகணை சோதனையை நடத்திய ஈரான் – பழி வாங்கும் தாக்குதல்கள் தொடரும் என சவால்

ஈரான் புரட்சி காவல் படையால் தற்போது புதிய ஏவுகணை ஒன்று நேற்று சோதனைக்கு உள்ளாக்க பட்டுள்ளது

குறித்த ஏவுகணை தனது இலக்கினை துல்லியமாக சென்று தாக்கியுள்ளது எனவும் இது எவ்வகையான கால நிலையிலும் சென்று தாக்கும் திறன் கொண்டது என இராணுவம் அறிவித்துள்ளது

இரகசியம்

இந்த ஏவுகணை எவ்விடத்தில் வைத்து சோதனைக்கு உள்ளாக்க பட்டது என்கின்ற விடயத்தை ஈரான் இராணுவம் தெரிவிக்க மறுத்து

விட்டது ,அதில் இருந்து இஸ்ரேலின் எந்த இலக்குகளை இவை தாக்கும் திறனுடன் இந்த புதிய ஏவுகணை மேம்படுத்த பட்டுள்ளது என்பதனை இதில் இருந்து ஊகித்து கொள்ள முடியும்

தாக்குதல் தூர வீச்சு

இந்த ஏவுகணையானது சுமார் 300 கிலோமீற்றர், அல்லது 180 மைல்களை சென்று தாக்கும் திறன் படைத்தது ,ஈரான் மீது தொடர் இராணுவ வலிந்து தாக்குதல்களை இஸ்ரேல் தொடுத்து வரும்

நிலையில் தமது நாட்டின் தேசிய பாதுகாப்பை இவ்வைகையான ஏவுகணை தயாரிப்பு மூலமே சமன் நிலை படுத்தி எதிரிகளின் இறுமாப்பை குறைக்கலாம் என ஈரான் நம்புகிறது

வடகொரியா தந்திரம்

வடகொரியா எதிரி நாடுகளின் மிரட்டலுக்கு அடிபணியாது ஏவுகணை சோதனைகள் மூலம் தனது நாட்டை வளர்ச்சி பாதை

நோக்கி ஈட்டி சென்றது , அவ்விதமான ஒத்திசைவான நோக்கில் ஈரானும் நகர்ந்து செல்கிறது

சிங்க குட்டி பிறக்க போகிறது இளவரசர் கரி தம்பதிகள் அறிவிப்பு

அடிக்கடி மீன் சாப்பிட்டா இது நடக்கும் அவதானம்


இதுவரை 2000 கிலோமீட்டர்கள் தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை தன்னகத்தே ஈரான் வைத்துள்ளது

மேலும் 10 ஆயிரம் கிலோமீற்றர் சென்று தாக்கும் ஏவுகணைகளை தயாரிக்கும் அதிரடி நடவடிக்கையிலும் ஈரான் தற்போது ஈடுபட்டுள்ளது

அணுகுண்டு சோதனை

மேலும் தமது நாட்டு அணுகுண்டு சோதனைகள் மூலமே எதிரி நாடுகளிடம் இருந்து முற்றாக தம்மை பாதுகாத்து கொள்ள முடியும்

என்ற நிலையில் யுரேனியம் செரிவாக்க பணிகள் தீவிரமாக இடம்பெற்ற வண்ணம் உள்ளது ,இதில் ஐம்பது வீதம் நிறைவடைந்துள்ளது

மேலும் ஐம்பது வீதம் நிவர்த்தி செய்யப் பட்டு விட்டால் ஈரான் அணுகுண்டு சோதனையை முழுமையாக நடத்தி முடித்து விடும்

அதன் பின்னர் இஸ்ரேலுக்கு மிக பெரும் அச்சுறுத்தலாக ஈரான் நேரடியாக விளங்கும் ,அத்துடன் முஸ்லீம் நாடுகளையும் தனக்கு

கீழ் ஒன்றிணைத்து விடும் என்ற அச்சமும் இஸ்ரேலுக்கு இருக்கத்தான் செய்கிறது

இஸ்ரேல் தொடுக்கும் வலிந்து தாக்குதல்கள் மிக பெரும் போரில் சென்று முடியும் என்பதே சமீபகால நகர்வுகள் கட்டியம் இடுகின்றன

Leave a Reply