வீடுகளுக்குள் திடீரென புகும் பொலிஸார்

Spread the love

இலங்கை

வீடுகளுக்குள் திடீரென புகும் பொலிஸார்

மாவீரர் வாரத்தினை நினைவு கூருவதற்கு பொலிசாரினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு

அமைய வவுனியா நீதிமன்றினால் விதிக்கப்பட்ட தடை உத்தரவுக் கட்டளையைக் உரியவர்களுக்கு வழங்குவதற்காக சரியான முகவரிகள் இன்றி வவுனியா பொலிசார் வீடு வீடாக சென்று வருகிறார்கள்.

வவுனியா பொலிஸ் நிலைய பிரிவுக்குள் 20.11.2021 தொடக்கம் 29.11.2021 வரை மாவீரர் நாளினை நினைவு கூருவதற்கு வவுனியா தலைமையகப் பொலிசாரரினால் வவுனியா நீதிமன்றில் தடை

உத்தரவு கோரி மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதனை ஆராய்ந்த மன்று குறித்த நிகழ்விற்கு தடை உத்தரவு பிறப்பித்துள்ளதுடன், பொலிசாரினால் பெயர் குறிப்பிட்டப்பட்ட 8 பேருக்கும் தடை உத்தரவு கட்டளையை வழங்கியுள்ளது.

அதனடிப்படையில் முன்னால் அரசியல் கைதியான செல்வநாயகம் அரவிந்தன், காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க தலைவி கா.ஜெயவனிதா, காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க செயலாளர்

கோ.ராஜ்குமார், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன், முன்னாள் வடமாகாண அமைச்சர் ப.சத்தியலிங்கம்,

தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் உப தலைவர் சி.கஜேந்திரகுமார், தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் முக்கிய செயற்பாட்டாளர் சு.தவபாலன் ஆகியோருக்கு குறித்த தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

இதில் பெயர் குறிப்பிட்ட சிலரது முகவரிகள் தவறாக பொலிசாரினால் வழங்கப்பட்டுள்ளமையால் குறித்த நபர்களை தேடி வவுனியா பொலிசார் வீடு வீடாக திரிந்து வருகின்றனர். பின்னர்

தொலைபேசி அழைப்பெடுத்து அவர்கள் நிற்கும் இடங்களுக்கு சென்று குறித்த தடை உத்தரவுகள வழங்கப்பட்டடு வருகின்றது.

இதேவேளை, குறித்த தடை உத்தரவில் தமது பெயர்கள் இருக்கின்ற போதும் முகவரிகள்

பிழையாக உள்ளதாகவும், பொலிசாரால் வழங்கப்பட்ட கட்டளையில் தமிழ் எழுத்து பிழைகள் அதிகமாக உள்ளதாகவும் தடை உத்தரவைப் பெற்றவர்கள் தெரிவித்துள்ளனர்.

    Author: நலன் விரும்பி

    Leave a Reply