இலங்கையில் 471பேருக்கு கொரோனா

Spread the love

இலங்கையில் 471பேருக்கு கொரோனா

இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 433 ஆக அதிகரித்துள்ளது.

இன்றைய தினத்தில் (2020.04.25) இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உறுதிசெய்யப்பட்ட 13 நோயாளர்கள்

பதிவாகியிருப்பதாக கொவிட் 19 தொற்று பரவுவதை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தில் சுகாதார சேவைகள்

    பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க உறுதிசெய்தார்.

    இந்த 13 நோயாளர்களில் 7 பேர் கந்தகாடு தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தபட்டிருந்தவர்கள்.

    ஒருவர் கொழும்பு 12 பண்டாரநாயக்க மாவத்தை பகுதியில் 12 வயதைக் கொண்ட சிறுவன் ஆவான்.

    மேலும் 4 பேர் வெலிசறை கடற்படை முகாமின் பதிவானதுடன் மற்ற நோயாளி மொனராகலை வைத்தியசாலையில் பதிவாகியுள்ள

    கடற்படை வீரர் ஆவார் என்று பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

    இணைப்பு இரண்டு

    இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 471

    இலங்கையில் பதிவான கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 471ஆம அதிகரித்துள்ளது.

    இன்றைய தினத்தில் (2020.04.26) இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உறுதி செய்யப்பட்ட புதிதாக 11 நோயாளர்கள்

    பதிவாகியிருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் நிபுணர் அனில் ஜாசிங்க உறுதி செய்தார்.

    இந்த 11 நோயாளர்களில் 10 பேர் கடற்படை அங்கத்தவர்களாவதுடன் ஒருவர் கந்தகாடு தனிமைப்படுத்தல்

    மத்திய நிலையத்தில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தவர்.

    இதற்கமைவாக இலங்கையில் பதிவான மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை 471ஆகும்.
    இந்த நோயாளர்களில் 120 பேர் குணமடைந்து

    வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர் என்றும் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் நிபுணர் அனில் ஜாசிங்க மேலும் தெரிவித்தார்.

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *