இலங்கையில் சுற்றுலா துறையை மேம்படுத்த இந்தியாவில் தெரு நிகழ்ச்சிகள்

இலங்கையில் சுற்றுலா துறையை மேம்படுத்த இந்தியாவில் தெரு நிகழ்ச்சிகள்
Spread the love

இலங்கையில் சுற்றுலா துறையை மேம்படுத்த இந்தியாவில் தெரு நிகழ்ச்சிகள்

இலங்கையில் சுற்றுலா துறையை மேம்படுத்த இந்தியாவில் தெரு நிகழ்ச்சிகள்

இலங்கை சுற்றுலாத்துறை அமைச்சு ,இந்தியாவின் முக்கிய நகரங்களில் தொடர்ச்சியான தெரு நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

தெரு நிகழ்ச்சிகள் மூலம் இந்தியாவுடன் இணைந்து இரு தரப்பு உறவுகளையும், கலாச்சாரத்தினை விரிவுபடுத்துவதன் மூலம் இலங்கை

சுற்றுலாத்துறையினை மேம்படுத்த முடியும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இந்நிகழ்ச்சிகளை 2022 செப்டெம்பர் 26 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

முதலாவது நிகழ்ச்சி செப்டம்பர் 26 ஆம் திகதி புதுதில்லியில் உள்ள தாஜ் பேலஸ் ஹோட்டலில் நடைபெறும். அதைத் தொடர்ந்து செப்டம்பர் 28 ஆம் தேதி

மும்பையில் உள்ள செயின்ட் ரெஜிஸ் ஹோட்டல்லில் நடைபெறுவதுடன் செப்டம்பர் 30 ஆம் திகதி ஹைதராபாத்தில் உள்ள தாஜ் கிருஷ்ணா

ஹோட்டலில் நடைபெறும் நிகழ்ச்சியுடன் அனைத்து நிகழ்ச்சிகளும் நிறைவடையும்.

இந்த நிகழ்ச்சி மூலம் பெரும்பாலானோரின் கவனத்தை ஈர்ப்பதற்காக இலங்கை பிரபலங்கள் சனத் ஜெயசூரியா மற்றும் யோஹானி டி சில்வா பங்கேற்க உள்ளனர்.

மேலும் இந்த நிகழ்வுகள் மூலம் பார்வையாளர்களுக்கு அற்புதமான அனுபவத்தையும் மற்றும் இலங்கையின் கலாச்சாரம் தொடர்பான கவனத்தை

ஈர்க்கும் வண்ணம் நடனம் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.

நடனக் குழுவிற்கு Mastercard நிதியுதவி வழங்குவதுடன் யொஹானியின் இசை நிகழ்ச்சி மூலம் அவரது திறமையும் வெளிப்படும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இந்தியா முழுவதிலும் இலங்கையின் அழகை வெளிப்படுத்தி, இலங்கையின் பிரதான வருமான சந்தைகளில் ஒன்றாக காணப்படும் சுற்றுலா துறையின் வளர்ச்சியை அதிகரிப்பதுவே இதன் பிரதான நோக்கம் ஆகும்.

இலங்கையில் சுற்றுலா துறையை மேம்படுத்த இந்தியாவில் தெரு நிகழ்ச்சிகள்

அத்துடன் கொரோனா தொற்றுக்கு பின்னர் நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார பின்னடைவில் இருந்து மீட்சி பெறுவதற்கு இந்த நடவடிக்கை பெரிதும் உறுதுணையாக அமையும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

நாட்டிற்கு வருகை தரும் பயணிகளில் அதிகளவானோர் இந்தியாவை சேர்ந்தவர்களாகவும் தற்போது சுற்றுலாப் பயணிகளின் வருகையில் கணிசமான அதிகரிப்பை இலங்கை கண்டு வருகிறது..

இந்த நிகழ்வானது எண்ணற்ற சுற்றுலா அனுபவங்களை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்தும் அதே வேளையில் ஓய்வு , வணிக நடவடிக்கையில் சுற்றுலா

பயணிகளின் எண்ணிக்கையினை அதிகரிப்பதிலும் அதிக அளவு கவனம் செலுத்தப்படுகிறது.

இந்த நிகழ்ச்சிகளின் பிரதான இலக்கு மேல்மட்ட வணிக தரகர்கள் , கூட்டுறவு நிறுவனங்கள் , வர்த்தக சங்கங்கள் மற்றும் இந்தியாவின் முக்கிய சுற்றுலாத் துறை பங்குதாரர்கள் மூலம் இலங்கை மிகவும் அழகான நாடுகளில் ஒன்றாகும்

என்ற செய்தியை எடுத்துச் செல்வார்கள் எனவும் தேவையான அனைத்து சுகாதார மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களையும் கடைபிடிப்பது

சுற்றுலாத்துறை முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தலைமையில் இலங்கை சுற்றுலா மேம்பாட்டு பணியகத்தின் தலைவர் சாலக கஜபாகு மற்றும்

இலங்கை மாநாட்டு பணியகத்தின் தலைவர் திசும் ஜயசூரிய ஆகியோருடன் 50 இற்கும் மேற்பட்ட உள்ளூர் பயண முகவர் நிலையங்கள் மற்றும் ஹோட்டல் பிரதிநிதிகள் இந்த நிகழ்வில் பங்குபற்றவுள்ளனர்.

ஒவ்வொரு நிகழிச்சிகள் மூலமும் வணிகத்திலிருந்து வணிகம் (B2B ) நடவடிக்கை மூலம் வணிக கூட்டாண்மைகளை மேம்படுத்த உதவும்.

இத்திட்டத்தின் போது, சுற்றுலாத்துறை அமைச்சர் பல உயர்மட்ட வணிகத் தலைவர்கள், சுற்றுலாப் பங்குதாரர்கள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்களைச்

சந்திப்பார். அதே நேரத்தில் முன்னணி இந்திய ஊடக நிறுவனங்களுடன் பல ஊடக நேர்காணல்களில் ஈடுபடுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரையில் இந்தியாவிலிருந்து 80 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதுடன் 2023 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை இரண்டு மடங்காகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சாலைக் காட்சிகள் மூலம் இலங்கையின் பல்வேறு இடங்கள், கலாச்சார விழுமியங்கள் மற்றும் பயண வாய்ப்புகள் பற்றிய நேரான மனநிலையை உருவாக்கி சுற்றுலா
துறையை மேம்படுத்தவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Leave a Reply