இரு பெண்களை காணவில்லை

Spread the love

இரு பெண்களை காணவில்லை

இலங்கையில் விறகு தேடச் சென்ற இரண்டு இளம் பெண்கள் கடந்த ஐந்து நாட்களாக காணவில்லை என மட்டக்களப்பு அக்கரபத்தனை பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்யப்பட்டுள்ளது

இவ்வாறு காணாமல் போன இரு பெண்கள் தொடர்பான விசாரணையை காவல்துறையினர் துரிதமாக ஆரம்பித்துள்ளனர்

கடந்த இரண்டாம் திகதி காலை 11 மணியளவில் வீட்டில் இருந்து விறகு சேர்க்க சென்றவர்கள் மீண்டும் வீடு திரும்பவில்லை

உறவினர்களினால் தேட பட்ட பொழுதும் இதுவரை இவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் தெரிவிக்க படுகிறது

காணாமல் போன இரண்டு பெண்களும் தோட்டத்தில் கூலி தொழில் செய்து வந்தவர்கள் என்றும் அவ்விதமான இரு யுவதிகளும் காணாமல் போன சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது

இவர்களைத் தேடும் பணியில் அக்கரப்பத்தனை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.எனினும் இதுவரை அவர்கள் தொடர்பான எவ்வித தகவலும் தெரியவரவில்லை

இலங்கையில் நாள் தோறும் காணாமல் போவார்கள் எண்ணிக்கை அதிகரித்து செல்ல படுகிறது

இரு பெண்களை காணவில்லை

இவ்விதம் காணாமல் போன அணைத்து பெண்களும் பெண்கள் சில நாட்கள் கழிந்த நிலையில் நீர் நிலைகள் மற்றும் ஆறுகள் பற்றைக்குள் இருந்து சடலங்கலக மீட்க பட்டு வரும் சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது

அப்பாவி கூலி வேலைக்கு சென்று தமது குடும்பத்தை காத்து வந்த இரு யுவதிகள் காணவில்லை என்ற செய்தி காட்டு தீயாக பரவிய நிலையில் மக்கள் மத்தியில் பெரும் பர பரப்பு ஏற்பட்டுள்ளது

இலங்கையில் அப்பாவி மக்கள் பட்டினி சாவின் விளிம்பில் தவித்து கொண்டிருக்கும் பொழுது நாட்டில் இவ்வாறு காணாமல் போகும் சம்பவங்கள் அதிகரித்து செல்கின்றமை பாமர மக்கள் முதல் செல்வந்தர்கள் வரை பெரும் அதிர் வலைகளை ஏற்படுத்தியுள்ளது

இவர்கள் கடத்த பட்டு கற்பழிக்க பட்டு கொலை செய்ய பட்டிருக்க கூடும் என்ற சந்தேகம் வலுப்பெற்று வருகிறது

கடந்த காலங்களில் இவ்வாறான நிலையில் பெண்கள் மற்றும் ஆண்கள் சடலங்களாக மீட்க பட்டு வரும் நிலையில் இவ்விதமான அச்ச நிலை ஏற்பட்டுள்ளது

கிராம மக்கள் மாற்றுக போலீசார் காட்டுப்புற பகுதியில் தொடர்ந்து தேடுதலை நடத்திய வண்ணம் உள்ளனர்

தொடரு மர்மக் கொலைகளுக்கும் காணவில்லை பட்டியலில் காணாமலாக்கப்படும் இந்த நிலை என்று நீங்கும்

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *