இணையவழி சூதாட்டத் தளங்களுக்கு வரி விதிப்பது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறது
இணையவழி சூதாட்டத் தளங்களுக்கு வரி விதிப்பது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறது ,அண்மையில் இணையவழி சூதாட்ட நடவடிக்கைகளுக்கு வரிகளை அறிமுகப்படுத்துவது குறித்து அரசாங்கம்
கைத்தொழில் பிரதி அமைச்சர்

பரிசீலித்து வருவதாக கைத்தொழில் பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார்.
இத்துறை முறையாக ஒழுங்குபடுத்தப்பட்ட பின்னரே இந்த வரி அறிமுகப்படுத்தப்படும் என்று பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.
இலங்கையின் சூதாட்டத் தொழிலை ஒழுங்குபடுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு மசோதா கடந்த ஆண்டு
அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் கீழ் ஒரு ஒழுங்குமுறை ஆணையம் நிறுவப்பட்டு, தேவையான விதிகளும்
ஒழுங்குமுறைகளும் செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டின் தற்போதைய வரிவிதிப்பு
நாட்டின் தற்போதைய வரிவிதிப்புக் கட்டமைப்பு குறித்துப் பேசுகையில், பிரதி அமைச்சர் தனது சமூக ஊடகக் கணக்கு வழியாகப் பகிர்ந்த ஓர் அறிக்கையில் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.
இதற்கிடையில், எதிர்காலத்தில் அத்தியாவசியப் பொருட்கள் மீதான மறைமுக வரிகளைக் குறைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.






