அரிசியை இறக்குமதி செய்ய தீர்மானம்
அரசாங்கம் அரிசியை இறக்குமதி செய்ய தீர்மானித்திருப்பதாக அமைச்சரவை இணைப்பேச்சாளரும், பெருந்தோட்டத்துறை அமைச்சருமான ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.
சந்தையில் போதுமான அரிசியின் தேவையை உறுதி செய்யும் வகையில் அரிசி இறக்குமதி
செய்யப்படுகின்றது என்று தெரிவித்த அமைச்சர், இதனால் விவசாயிகள் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் கூறினார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இன்று (11) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.
இதுதொடர்பான அமைச்சரவையில் நேற்று மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பினவருமாறு: வருமாறு:
- நியாயமான விலையில் அரிசியை விநியோகிப்பதற்காக அரிசி இறக்குமதி செய்தல்
திறந்த சந்தையில் போதுமானளவு அரிசித் தொகை பேணுவதை உறுதி செய்வதற்காக 200,000 மெட்ரிக்தொன் நாட்டரிசி மற்றும் சம்பா அரிசிகளுக்கு பதிலீடாக புசு GR Short Grain Rice வகை
அரிசி 100,000 மெட்ரிக் தொன்களை இறக்குமதி செய்வதற்காக வர்த்தக அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது






