அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வைத்தியசாலைக்கு மாற்றம்
அவரை ஹெலிக்கொப்டர் மூலம் வோல்டர்-றீட் இராணுவ மருத்துவ மனைக்கு கொண்டு செல்வதாக வெள்ளை மாளிகை
அறிவித்துள்ளது. இதுவொரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையென வெள்ளை மாளிகை விடுத்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஜனாதிபதிக்கும், அவரது பாரியாருக்கும் புதன்கிழமை கொவிட்-19
தொற்று உறுதி செய்யப்பட்டது. திரு.ட்ரம்பிற்கு ஆரம்பகால நோய் அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளன. அவர்
களைப்படைந்திருந்தாலும்இ பலத்துடன் உள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது..
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இதுகுறித்து தனது சுட்டுரை பக்கத்தில் அவா் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
மெலானியா டிரம்ப்புக்கும், எனக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. நாங்கள் இருவரும் உடனடியாக வெள்ளை மாளிகையில் எங்களை
தனிமைப்படுத்திக் கொண்டுள்ளோம். நோய்த்தொற்றிலிருந்து குணமடைவதற்கான வழிமுறைகளை உடனடியாகத்
தொடங்கியுள்ளோம். இருவரும் இணைந்து, விரைவில் இந்த நோய்த் தொற்றிலிருந்து மீள்வோம் என்று அந்த சுட்டுரைப் பதிவில் டிரம்ப் குறிப்பிட்டுள்ளாா்.
துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ டிரம்ப்பும் அவரது மனைவியும் கொரோனா நோய்த்தொற்றிலிருந்து
குணமடைய, லட்சக்கணக்கான அமெரிக்கா்களுடன் இணைந்து எங்களது குடும்பத்தினரும் பிராத்தனை செய்கிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
கொரோனா நோய்த்தொற்றிலிருந்து டிரம்ப் பூரண குணமடைய விழைவதாக, இந்திய பிரதமா் நரேந்திர மோடிஇ பிரிட்டன் பிரதமா்
போரிஸ் ஜான்ஸன்இ ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் உள்ளிட்ட உலகத் தலைவா்கள் தெரிவித்துள்ளனா்.
அமெரிக்காவில் அடுத்த மாதம் அதிபா் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில்இ டிரம்ப்புக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது தோ்தல் பிரசாரத்தை பாதிக்கும் என்று கருதப்படுகிறது.






