அனுரா ஆட்சியில் 95துப்பாக்கிச் சூடு
அனுரா ஆட்சியில் 95துப்பாக்கிச் சூடு ,இலங்கையில் ஆளும் ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்கா அவருடைய ஆட்சியில் 95 மேற்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன.
இந்த துப்பாக்கி சூட்டில் 40க்கு மேற்பட்டவர்கள் பலியாகி இருப்பதாகவும் ,புதிய புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
நாட்டில் வன்முறைகள்
நாட்டில் வன்முறைகள் அடக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் நலினக்கத்துடன் வாழ்வதாகவும் இலங்கை ஆளும்
ஜனாதிபதி அதிரக்குமார திசநாயக்கா அவர்கள் தெரிவித்து வருகிறார்.
அவிதம் இருக்கிற பொழுது இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் எப்படி எவ்வாறு இடம் பெறுகிறது என்ற கேள்விக்கு அவர் பதில் தர மறுக்கிறார் .
மக்கள் அச்சமின்றி இலங்கை எங்கும் வாழ்வதற்கான வாலிப வகைகள் இன்றைய இலங்கையில் இருக்கிறதா என்ற கேள்வியை இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களின் அதர்வலைகள் எதிரொலியாக ஒலிக்கிறது .
இலங்கையில் மக்கள் வாழ முடியாத பாதுகாப்பு அற்ற நாடு
நாளை இலங்கையில் மக்கள் வாழ முடியாத பாதுகாப்பு அற்ற நாடாக இலங்கை மாறிக்கொண்டு இருப்பதை இந்த தொடரான துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் காண்பிக்கின்றன.
வீதிக்கு வீதி காவல்துறையினர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பொழுதும் இராணுவத்தினர் ஆயுதங்களுடன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பொழுது இந்த துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் எவ்வாறு இடம் பெறுகிறது .
என்ற கேள்விக்கு இதுவரை ஆளுகிற ஆட்சி அதிகார வர்க்கங்களோ காவல்துறை வர்க்கங்களோ இதற்கான பதிலை தரவில்லை.
ஆக இந்த துப்பாக்கி சூட்டு சம்பவங்களின் பின்புலத்தில் அரசியல் ஒளிந்து இருப்பதையே இது அம்பலப்படுத்துகிறது.







