பத்து ஆயிரம் பேருக்கு வேலை

இதனை SHARE பண்ணுங்க

பத்து ஆயிரம் பேருக்கு வேலை

க.பொ.த சாதாரணதரத்தைப் பூர்த்தி செய்த ஒரு இலட்சம் மாணவர்களுக்கான ஆட்சேர்ப்பு

வேலைத்திட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சமுர்த்தி, நுண் நிதி, சுயதொழில் மற்றும்

தொழில் முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே ஷெஹான் சேமசிங்க இதை தெரிவித்தார். மேலும் குறிப்பிடுகையில்,

2015 – 2019 காலப்பகுதியில் அரச சேவைக்கு வழங்கப்பட்ட மொத்த வேலை வாய்ப்புகளின் எண்ணிக்கை 22,145 ஆகும்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ ஆட்சிக்கு வந்த பின்னர் அபிவிருத்தி உத்தியோகத்தர்

சேவைக்கு மாத்திரம் 60,000 பட்டதாரி நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், க.பொ.த சாதாரண தரம் வரை படித்த அல்லது க.பொ.த சாதாரண தர பரீட்சையில்

சித்தியடையாத 100,000 இளைஞர், யுவதிகளை இணைத்துக்கொள்ளும் வேலைத்திட்டம்

ஆரம்பிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் மேலும் தெரிவித்தார்


    இதனை SHARE பண்ணுங்க

    Author: நலன் விரும்பி

    Leave a Reply