வெள்ளை மாளிகைக்கு அனுப்பிய விஷம் தடவிய கடிதம்-தப்பிய டிரம்ப்

Spread the love

வெள்ளை மாளிகைக்கு அனுப்பிய விஷம் தடவிய கடிதம்

அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு விஷம் தடவிய கடிதம் அனுப்பப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுபற்றி உளவுத்துறை தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளது.

வெள்ளை மாளிகைக்கு அனுப்பிய விஷம் தடவிய கடிதம் -உளவுத்துறை தீவிர விசாரணை

அமெரிக்க அதிபர் டிரம்புக்கு ரைசின் என்ற விஷப்பொருள் தடவப்பட்ட கடிதம் அனுப்பப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளை மாளிகைக்கு அந்த கடிதம் சென்றடைவதற்கு

முன்பாகவே, வழக்கமான சோதனையின்போது அந்த கடிதம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி உளவுத்துறை தீவிரமாக விசாரணை மேற்கொண்டுள்ளது.

கனடாவில் இருந்து இந்தக் கடிதம் அனுப்பப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன. அமெரிக்காவில் விரைவில் அதிபர் தேர்தல் நடக்க உள்ள நிலையில், டிரம்பை குறிவைத்து கடிதம்

அனுப்பப்பட்டதா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதுகுறித்து டிரம்ப் நிர்வாகம் இதுவரை எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *