வெட்டி கொலையான காதல் ஜோடி
வெட்டி கொலையான காதல் ஜோடி ,முன்விரோதம் காரணமாக உறங்கிக் கொண்டிருந்த காதல் ஜோடி மீது கொடூரமான முறையில் ஆயுதங்களால் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் ஒன்று சென்னையில் பதிவாகியுள்ளது.
சென்னை டி.பி.சத்திரம் 27-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் இஸ்ரவேல் (வயது 20). இவர் சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் 2-ம் ஆண்டு பட்டப்படிப்பு
படித்ததாக கூறப்படுகிறது. இவர் மீது பல்வேறு அடிதடி வழக்குகள் நிலுவையில் உள்ளது.
பாடசாலை மாணவி
இவர், ஜாபர்கான்பேட்டை பகுதியை சேர்ந்த பாடசாலை மாணவியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இவர்கள் 2 பேரும் ஒன்றாக ஜாலியாக சுற்றி வந்தனர். கடந்த சனிக்கிழமை இரவு பெரியமேடு பகுதியில் ஒன்றாக கைகோர்த்தபடி நடந்து வந்தனர்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி அப்பாஸ் என்பவர் வழிமறித்து தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இஸ்ரவேலின் காதலியிடம் தவறாக நடக்க முயற்சித்துள்ளார். அதில் மோதல் ஏற்பட்டது. அக்கம், பக்கத்தினர் தடுத்து அவர்களை விலக்கி விட்டுள்ளனர்.
ஆனால் அப்பாஸ் இஸ்ரவேலையும், அவரது காதலியையும் தீர்த்துக்கட்டாமல் விட மாட்டேன் என்று மிரட்டி அனுப்பியதாக தெரிகிறது.
இதனால் இஸ்ரவேல் மிகவும் எச்சரிக்கையோடு தனது காதலியோடு டி.பி.சத்திரம் பகுதியில் உள்ள வீட்டின் மொட்டை மாடியில் நேற்று முன்தினம் இரவு படுத்து தூங்கி உள்ளார்.
அவர்களை தீர்த்துக்கட்டும் நோக்கத்தோடு அப்பாஸ் தனது நண்பர்கள் 3 பேருடன் சேர்ந்து கொடூர தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
காதலிக்கும் அரிவாள் வெட்டு
இஸ்ரவேலுக்கும், அவரது காதலிக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் இஸ்ரவேல் பலத்த காயமடைந்தார்.
அவரது காதலிக்கும் காயம் ஏற்பட்டது. அக்கம், பக்கத்தினர் திரண்டு வந்ததால் அப்பாசும், அவரது நண்பர்களும் தப்பி ஓடிவிட்டனர்.
இஸ்ரவேலும், அவரது காதலியும் கீழ்ப்பாக்கம் அரசு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கீழ்ப்பாக்கம் பொலிசார் கொலைமுயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு அப்பாசும், மற்றும் அவரது நண்பர்கள் 3 பேரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.