விபச்சாரத்தை விட்டிடு ……!


விபச்சாரத்தை விட்டிடு ……!

என் பணத்தை நீ பறிக்க
எனக்கென்ன வலை விரிப்போ …
உன் கணக்கில் நான் இலக்கோ ..?
உறவாட வரி விலக்கோ …?

தூங்காத கண் மணியே
துயிலுரிக்க முடியாதே ….
மயங்காத மனிடமே
மனதை நீ எறியதே ….

உருகாத மெழு கொன்றில்
உஷ்ணத்தை ஏற்றாதே …
கறையான் புற்றொன்றில்
கை கழுவ முடியாதே ….

ஏறி கின்ற தூண்டிலுக்குள்
ஏய் மனமே சிக்காதே ..
தப்பான கணக்கொன்றில்
தவறியது ஏன் தானோ ..?

முறையான கணக்கென்றால்
முன்னே நாம் வந்திடலாம் …
பிழையான கணக்கொன்றில்
பிள்ளைகள் யாம் வீழ்ந்திடவோ ..?

என் உடலை நான் காட்ட
எனக்கவன் முதலாளி …?
அவன் சொல்லில் நான் ஆடும்
அம்மண தொழிலாளி ….

இது தானோ உன் வாழ்வு ..?
இவ்வுலகில் நீ தாழ்வு ….
அறியாமல் அலைகின்றாய்
அவசரத்தில் விதைக்கின்றாய் …

உயிர் கொல்லி நோய் வாங்கி
உன் உடலை ஏன் அழித்தாய் ..?
இது போன்ற தொழில் ஒன்று
இனி வேண்டாம் விட்டிடுவாய் …?

வன்னி மைந்தன்
ஆக்கம் -26-05-2020

விபச்சாரத்தை-விட்டிடு
விபச்சாரத்தை-விட்டிடு