விடுதலை புலி ஆதரவாளர்களை நாம் துன்புறுத்தவில்லை- மலேசிய பொலிஸ்…!
விடுதலை புலிகள் இயக்கத்திற்கு உதவி புரிந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பொலிஸ் தடுப்பில் உள்ள சந்தேகநபர்கள் சித்திரவதை செய்யப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை கடுமையாக நிராகரிப்பதாக மலேசிய பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
அவ்வாறான குற்றச்சாட்டுக்கள் முற்றிலும் ஆதாரமற்றவை மற்றும் பொறுப்பற்றவை என அவர் தெரிவித்துள்ளார்.
விடுதலை புலிகள் இயக்கத்திற்கு உதவி புரிந்த குற்றச்சாட்டின் கீழ் இரண்டு அரசியல்வாதிகள் உள்ளிட்ட 12 பேர் கடந்த தினம் மலேசியா பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு தடுத்து