வானில் தோன்றிய மர்ம பிரமிடு

Spread the love

வானில் தோன்றிய மர்ம பிரமிடு

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் உள்ளது பிலடெல்பியா நகரம். இங்கு நேற்று இரவு ஆரஞ்சு நிற ஒளியுடன் பிரமிடு போன்ற உருவம் வானில் தோன்றியுள்ளது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள் அதை புகைப்படம் மற்றும் வீடியோக்கள் எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். இது குறித்து பலர் தங்களுக்கு தெரிந்த பல்வேறு தகவல்களை வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.

இது குறித்து யுடியூப் ஆராச்சியாளர் ஒருவர் கூறுகையில், ‘இது ஆச்சர்யமான ஒரு நிகழ்வு. வெனிசியா என்ற பெண்ணால் எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் வானில் முக்கோண வடிவ உருவம் ஒன்று தோன்றியுள்ளதாக காட்டுகிறது. ஆரஞ்சு நிற ஒளியுடன் இருக்கும் அந்த உருவம், நெருப்பிற்குள் இருப்பது போன்று தெரிகிறது.

அதை உற்று நோக்கினால் அதன் பின்பு ஒரு சாயல் இருப்பது போன்று தெரிகிறது. அது வினோத நிறங்களில் உள்ள மேகமாக இருக்கலாம். ஆனால் உறுதியாக வானத்தில் பிரமிடு இருப்பது போன்றே தோன்றுகிறது’, என தெரிவித்தார்.

யுடியூப் வாடிக்கையாளர்கள் சிலர் அதை எரியும் பிரமிடு எனவும், தீப்பிழம்பை உமிழ்கிறது எனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.

வானில் தோன்றிய பிரமிடு உருவம்

ஆனால் பல பார்வையாளர்கள் இந்த உருவத்தை பிரபலமற்ற டிஆர் -3 பி உளவு விமானத்துடன் ஒப்பிட்டனர். டி.ஆர் -3 பி உளவு விமானம், அமெரிக்க அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட ஆளில்லா விமானம் என்று கூறப்படுகிறது. வேறு சிலர் இது வெறும் மலை உச்சிதான் என தெரிவிக்கின்றனர். இதன் உண்மைத்தன்மை குறித்து தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

இந்த காணொளி யுடியூப் வலைத்தளத்தில் நேற்று பதிவேற்றப்பட்டது. இதுவரை 2,0000 முறை இந்த வீடியோ பார்க்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *