வாகனத்தால் மக்களை இடித்து கொன்ற சிறுவன்

Spread the love

வாகனத்தால் மக்களை இடித்து கொன்ற சிறுவன்


இன்று காலை வெலிசர பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் காயமடைந்து ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பில் இருந்து நீர்கொழும்பு நோக்கி, குறித்த சிறுவனால் செலுத்தப்பட்ட அதிசொகுசு வாகனம், வீதியை விட்டு விலகி எதிர் திசையில் பயணித்த கார், ஓட்டோ மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்களுடன் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

‍வேகக்கட்டுப்பாட்டை இழந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவரே உயிரிழந்துள்ளதுடன், இந்த விபத்து தொடர்பில் மஹபாகே பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *