வழியின்றி கதறும் வயோதிபம் ஒன்று
தடு மாறும் மனதொன்று தள்ளாடுது
தடம் மாறி வழி ஒன்றை தடி தேடுது …..
உயிர் வாழ ஊன்று கோள் ஒன்றானது
உலவும் காலத்தில் நிலையானது ….
வயதாகும் வேளையில் வந்தானது
வழி காட்டும் துணையாகி உயிரானது …
இடரோடு எனை தாங்கும் துணையானது
இடறாது வழி தாங்கும் நிழலானது ….
ஒருபோதும் மனம் நோக கண்ணானது
ஒன்றாகி என்னோடு உயிர் வாழுது ….
வந்ததும் ,பெற்றதும் வழி விட்டது
வாயுக்கு சோறு இது இட்டது …..
நிலை மாறும் உலகில் புதிதானது
நீர் விழி தூங்கையில் ஓய்வானது ……
இன்றிந்த வாழ்வு எனக்கானது
இது போல நாளை உனக்கானது ……
துள்ளிடும் இளமையில் துணிவு கொண்டேன்
துணிந்தவன் என்று எண்ணி நின்றேன் ….
வாடையில் எண்ணியே வருந்தி கொண்டேன்
சாவுக்கு இடையிலே நானே நொந்தேன் …
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் -31/08/2017