லண்டன் மிச்சம் தமிழ் சிறுமி கொலை – விசாரணைகள் தீவிரம் -மக்கள் உதவியை நாடும் பொலிஸ்

லண்டன் மிச்சம் சிறுமி கொலை - விசாரணைகள் தீவிரம் -மக்கள் உதவியை நாடும் பொலிஸ்தாயின் செயலை கண்ணுற்ற 11 வயது மகனே காவல்துறைக்கு தகவல்

லண்டன் மிச்சம் சிறுமி கொலை – விசாரணைகள் தீவிரம் -மக்கள் உதவியை நாடும் பொலிஸ்

நேற்று பிரிட்டன் மிச்சம் பகுதியில் 35 வயது தாய் மற்றும் ஐந்து வயது மகள் சாயாகி உள்ளிட்ட தமிழர்கள் பலத்த கத்தி வெட்டு

காயங்களுக்கு உள்ளான நிலையில்
தொடர் அடுக்கு மாடி கட்டிடம் ஒன்றில் இருந்து மீட்க பட்டனர்

இவ்வாறு மீட்க பட்டவர்கள் மிக ஆபத்தான நிலையில் இருந்தமையால் உலங்குவானூர்தி மூலம் எடுத்து செல்ல பட்டு

சிகிச்சை அளிக்க பட்டது ,ஆனாலும் அழகிய அப்பாவி ஐந்து வயது சாயாகி பரிதாபகரமாக பலியானார்

தற்போது 35 வயதுடைய தாயார் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்,மருத்துவமனையில் உயிருக்கு போராடிய வண்ணம் உள்ளார்

மேலும் இவரது இந்த கொலை,தற்கொலை முயற்சி , தொடர்பாக அறிந்து கொள்வதில் மிக சிரமங்கள் ஏற்பட்டுள்ளது எனவும் ,இந்த

கொலைக்கான பின்புலம் ,மற்றும் அதற்குரிய காரணங்கள் ,புறசூழல் தொடர்பாக தற்போது சிறப்பு குற்ற தடுப்பு துறையினர் மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்

இந்த கொலை அல்லது தாயாரது செயல் பாடுகள் தொடர்பில் ஏதாவது தெரிந்தால் ,தமிழ் பேசும் மக்கள் தமக்கு தெரிவிக்கும் படி காவலதுறையினர் வேண்டுதல் விடுத்துள்ளனர்

மேற்படி விடயம் தொடர்பில் பல்வேறு பட்ட முறைகளில் விசாரணைகள் மற்றும் கண்காணிப்புக்கள் இடம்பெற்ற வண்ணம்

உள்ளது ,குறிப்பாக சமூக வலைத்தளங்கள் வெகுவாக கண்காணிக்க படுவதை மறைமுக சொல்லாடல்கள் மூலம் கணிக்க முடிகிறது

Sayagi Sivanantham.சாயகி சிவனானந்தம் இறப்பு உலக தமிழர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது ,இரு

பிள்ளைகளின் தயாரின் இந்த மன அழுத்தமே, இந்த கொலைகளுக்கு காரணமாக அமைந்துள்ளது

மிகவும் பண்பான ,நட்பான பெண் எனவும் ,அமைதியாக உள்ள அவர் தான் தனது பெண் பிள்ளை தொடர்பாக அதிகம் யோசிப்பதாக கூறியதாக மக்கள் மத்தியில் பரவலான பேச்சு உலவுகிறது

தாயின் செயலை கண்ணுற்ற 11 வயது மகனே காவல்துறைக்கு தகவல் வழங்கினார் என்ற செய்திகளும் கசிகிறது

மிக சிறந்த குடும்ப பெண்மணி ,சிறந்த படித்த பண்பான குடும்பத்தில் ,அன்பு செலுத்த தவறாத அழகிய உறவினர்கள்

,சொந்த பந்தம் உள்ள குடும்பத்தில் இடம்பெற்றுள்ள இந்த செயல் நம்மை மட்டும் அல்ல ஒட்டு மொத்த தமிழர் சமூகத்தை பெரும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது

மன அழுத்த நோய்க்கு சிகிச்சை பெற இருந்த முதல் நாள் இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளதாக மக்க மத்தியில் பேச படுகிறது

அன்பு மகளின் ஆறா துயரில் எதிரி இணையமும் பங்கெடுத்து கொள்கிறது ,விடுதலையின் நேசமானவள் ,ஈழ விடுதலை போருக்கு

தம்மை அர்ப்பணித்த அழகிய குடும்பம் ,அறம் நின்று செயல் படும் வீரம் செறிந்த தமிழ் குடும்பத்தில் நிகழ்ந்த செயல் கண்ணீரால் குளிக்க வைக்கிறது

மக்களே இவ்வாறானவர்களை கண்டால் ஆறுதல் கூறுங்கள் ,அரவணையுங்கள் ,எம்மால் முடிந்தஉதவிகளை செய்வோம்

,தேவை அற்ற விடயங்களை ,கூறை கூறுதல்,என்பனவற்றை இவ்வேளை தவிர்ப்பம் ,அவர்கள் நிலையில் இருந்து நாம் கொஞ்சம் சிந்திப்போம்

கணவன் மற்றும் மகனுக்கு ஆறுதல் கூறுங்கள் ,இவ்வேளை நாம் அதை தான் செய்திட முடியும் ,கண்ணுறக்கம் தொலைத்து அவர்களின் போலவே நாமும் வாடுகிறோம்

போலீசார் விரைவில் இது தொடர்பான முழுமையான விடயங்களை அறிய தருவார்கள் என்பது தெளிவாகிறது

அந்த அழகிய சிறுமிக்கு எமது கண்ணீர் அஞ்சலிகள்

சின்ன சிரிப்பழகி
சிவந்த உடல் அழகி
ஆளுமை பேரழகை
அவனியில் இழந்தோமே

பெற்ற தாயவளே
பெரும் துயர் தந்திடவே
கண்ணீர் உடைகிறது
கத்தி விழி அழுகிறது

ஒப்பாரி சத்தங்கள்
ஓயா ஒலிக்கிறது
வேரை அறுத்த செயல்
வேதனை கொதிக்கிறது

தப்பான சிந்தையால்
தவறாகி போனது
அப்பாக்கள் உழைப்பெல்லாம்
அலங்கோலம் ஆனது

என்ன நினைத்தாளோ ..
ஏன் இதை செய்தாளோ ..?
தாங்கி பெற்றவளோ
தாயே எமன் ஆனாள்

நெருக்கடி உனை வாட்ட
நொறுங்கி நீ வாட
கொங்கை பால் தந்தாள்
கொலையது செய்தாளோ …?

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் -01-07-2020

லண்டன் மிச்சம் சிறுமி கொலை - விசாரணைகள் தீவிரம் -மக்கள் உதவியை நாடும் பொலிஸ்தாயின் செயலை கண்ணுற்ற 11 வயது மகனே காவல்துறைக்கு தகவல்
லண்டன் மிச்சம் சிறுமி கொலை – விசாரணைகள் தீவிரம் -மக்கள் உதவியை நாடும் பொலிஸ்தாயின் செயலை கண்ணுற்ற 11 வயது மகனே காவல்துறைக்கு தகவல்
Spread the love