லண்டன் இலங்கை தூதரகம் முன்பாக தமிழர்கள் போராட்டம் வீடியோ
நேற்று 08-11-2022 லண்டன் இலங்கை தூதரகம் முன்பாக தமிழர் எதிர்ப்பு கண்டன போராட்டம் நடத்தினர் .
உள்ளூர் நேரம் மதியம் ஒரு மணி முதல் மூன்று மணி வரை இந்த, கண்டன எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது .
இந்த போராட்டத்தின் பொழுது ,பயங்கர வாத தடை சட்டம் நீக்க பட வேண்டும் ,
சூத்து மாத்து ரணில் விக்கிரமசிங்கா அரசியல் அகற்ற பட வேண்டும் ,அணைத்து அரசியல் கைதிகள் விடுதலை செய்ய பட வேண்டும் ,என்ற முக்கிய அம்ச கோரிக்கையை மையமாக வைத்து, இந்த அறவழி போராட்டம் இடம் பெற்றுள்ளது .
லண்டன் இலங்கை தூதரகம் முன்பாக இடம்பெற்ற போராட்டத்தை ,
தமிழருக்கான சுதந்திர வேட்டை என்கின்ற அமைப்பினர் தலைமை ஏற்று நடத்தினர் .
இலங்கை அரசாங்கம் பயங்கரவாத அரசாங்கம்
இலங்கை இராணுவம் பயங்கரவாத இராணுவம் என்கின்ற கொட்டு முரசுகள் ,கொட்டும் மழைக்குள்ளும் மக்கள் கோஷமாக முழங்கினர் .
இலங்கை ஆளும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா ,இலங்கை தமிழ் இன படுகொலையாளிகளான, ராஜபக்ச குடும்பத்தை அடைகாத்த படி ,நரி தந்திர அரசியலை நடத்திய வண்ணம் உள்ளார் .
அப்பாவி மக்கள் விடுதலை மற்றும் ,அவர்கள் வாழ்வாதார நெருக்கடிகள் தொடர்பாக எவற்றிலும் அக்கறை செலுத்தவில்லை .
தொடர்ந்து நாள் தோறும் மர்ம கொலைகள் இலங்கையை உலுப்பிய வண்ணம் உள்ளன .
நாள் தோறும் பற்றைகள் ,நீர் நிலைகளில் ,நான்கிற்கு மேற்பட்ட மனித சடலங்கள் மீட்க பட்ட வண்ணம் உள்ளது .கடத்த பட்டு காணாமல் போனவர்களே இவ்வாறு சடலங்களாக மீட்க பட்ட வண்ணம் உள்ளனர் .
இந்த கொலைகளின் பின்னால் , முன்னாள் ஜனாதிபதி கோட்டாபாயவின், நிழல் டிவிசன் இராணுவ அணியின் செயல் படுகின்றனர்,
என்கின்ற குற்ற சாட்டு, பலமாக வைக்க பட்டு வருகின்றமை இங்கே கவனிக்க தக்கது .


















லண்டன் போராட்டங்கள் யாவும் இதில் அழுத்தி பார்க்கலாம்
- மத்திய கிழக்கு மோதல்களுக்குப் பிறகு முதல் கச்சா எண்ணெய் கப்பல் இன்று வருகை

- 1 ஆம் வகுப்பு கல்வி சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவது குறித்து அமைச்சு அறிவிப்பு

- அஹுங்கல்லாவில் துப்பாக்கிச் சூடு

- புத்தாண்டுக்குப் பிறகு கொழும்பு திரும்பும் பயணிகளுக்காக சிறப்புப் பேருந்து சேவை

- தெதுரு ஓயா நீரில் மூழ்கி 8பேர் பலி

- இந்திய பிரதி ஜனாதிபதி சி. பி. ராதாகிருஷ்ணன் இலங்கை பயணம் மேற்கொள்கிறார்

- ஒன்பது சீன இணையக் குற்றவாளிகள் கைது

- பண்டிகைக் காலத்தில் 400-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மீது சட்ட நடவடிக்கை

- தனியார் பேருந்து மற்றும் தொடர்வண்டி சேவைகள் மீள் இயக்கம்

- பயணிகளுக்கு அமெரிக்கத் தூதரகம் எச்சரிக்கை








