லண்டனில் ,ரயில் நிலையம் ,தேவலாயங்களில் குண்டு தாக்குதல் நடத்த இருந்த முஸ்லீம் பெண்ணுக்கு சிறை


லண்டனில் ,ரயில் நிலையம் ,தேவலாயங்களில் குண்டு தாக்குதல்

நடத்த இருந்த முஸ்லீம் பெண்ணுக்கு சிறை

மேற்கு லண்டனைச் சேர்ந்த 37 வயதான சஃபியா ஷேக் (25.05.83) பிரிட்டனில்

உள்ள தேவலாயங்கள் ,மற்றும் நிலக்கீழ் சுரங்க நிலையங்கள் ,உணவகங்கள்

என்பனவற்றின் மீது தற்கொலை குண்டு தாக்குதலை நடத்திட முயன்ற

முஸ்லீம் பெண் ஒருவர் குற்ற தடுப்பு பிரிவினரால் கைது செய்ய பட்டார்

இவ்வாறு கைது செய்ய பட்டவர் தனது குற்றத்தை ஒப்பு கொண்ட நிலையில்

பதின் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது

இவ்வாறு இந்த தாக்குதல் நிகழ்த்த பட்டிருந்தால் பல நூறு மக்கள் பலியாகி

இருப்பார்கள் என தெரிவிக்க படுகிறது ,பிரிட்டன் உளவுத்துறையின்

இந்த செயல் பாடுகள் காரணமாக இவ்விதமான தாக்குதல்கள் முறியடிக்க பட்டு மக்கள் காப்பாற்ற பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

லண்டனில் ரயில் நிலையம்
லண்டனில் ரயில் நிலையம்