லண்டனில் ஆலயங்கள் அடித்து பூட்டு – பக்த கோடிகள் தவிப்பு
லண்டனில் பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலை அடுத்து தற்பொழுது இந்து ஆலயங்கள் அடித்து பூட்ட பட்டுள்ளன .
இந்த நோயால் பாதிக்க பட்டவர்கள் அலாயத்திற்கு வருகை தந்தால் ஆலயத்தை முற்றாக இயங்க விடாது தடை செய்து
விடுவார்கள் என்ற பீதியில் ஆலயங்கள் உள்ளே மக்கள் செல்ல விடாது அடித்து பூட்ட பட்டுள்ளது .
லண்டனில் மட்டும் அல்ல ஜெர்மன்,பிரான்ஸ்,டென்மார்க்,கனடா ,போன்ற நாடுகளிலும்
இவ்வாறு அடித்து பூட்ட பட்டுள்ளதாம் .
கொரனோவுக்கு நேர்த்தி கடன் வைத்தவர்கள் அதனை செய்ய முடியாத படி தவித்து வருகின்றனர் .
ஆலயங்கள் அடித்து பூட்ட பட்டதால் பல திருமண நிகழ்வுகள் இரத்து செய்ய பட்டுள்ளன என ஆலய குருக்கள் சிலர் நமக்கு தெரிவித்தனர்
,குருக்கள் நாளாந்த பூஜைகளை மக்களே உள்ளே விடாது செய்து வருவார்கள் அதனை மக்கள் அந்த ஆலாயங்கள் விசேட இணைய
காணொளி வாயிலாக நேரலையில் பார்க்க முடியும் என குறிப்பிட பட்டுள்ளது







