ராஜீவ் காந்தி கொலை வழக்கு – ரவிச்சந்திரனுக்கு 15 நாட்கள் பிணை

Spread the love

காந்தி கொலை வழக்கு – ரவிச்சந்திரனுக்கு 15 நாட்கள் பிணை

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைவாசம் அனுபவிக்கும் ரவிச்சந்திரனுக்கு 15 நாட்கள் பிணை வழங்கி உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

ரவிச்சந்திரனுக்கு ஒருமாத காலம் பிணை வழங்க கோரி அவரது தாயார் ராஜேஸ்வரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையை கோரியிருந்தார்.

அந்த கோரிக்கை அடங்கிய மனுவை நீதிபதிகளான ராஜா, புகழேந்தி அமர்வு விசாரணைக்கு உட்படுத்தியது.

இதன்போது அவருக்கு இந்த மாதம் 10 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அதாவது 15 நாட்களுக் சாதாரண பிணை வழங்கி நீதிபதிகள் உத்தவிட்டனர்.

இதுவரை 4 முறை ரவிச்சந்திரன் பிணையில் சென்றுள்ள நிலையில் அதனை பயன்படுத்தி அவர் எவ்வித அசம்பாவிதங்களிலும் ஈடுபட்டிருக்கவில்லை.

இதனை அடிப்படையாக கொண்டே அவருக்கு மீண்டும் 15 நாட்கள் பிணை வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

அத்துடன் தமிழகத்தில் தற்போது உள்ளாட்சி தேர்தல் முடிவடைந்துள்ளதால் அவருக்கு பிணை வழங்குவதில்

ஆட்சேபனை இல்லை எனவும் நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.ராஜீவ் காந்தி கொலை வழக்கு

இதே குற்றத்திற்காக சிறை வைக்கப்பட்டுள்ள பேரறிவாளனுக்கும் அண்மையில் ஒரு மாத பிணை வழங்கப்பட்டமை குறிப்பிடதக்கது ராஜீவ் காந்தி கொலை வழக்கு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *