யாழ் நாகவிகாரை சென்று வழிபட்ட ரணில் குழு- யாழில் பிரச்சாரம் ஆரம்பம்..!
தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்ளும் பொருட்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினர் யாழிற்கு விஜயம் செய்துள்ளனர்
யாழ்ப்பாணத்திற்கு விஐயம் செய்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க இன்று காலை யாழ் நாகவிரையில் வழிபாடுகளை மேற்கொண்டுள்ளார்.
ஐனாதிபதி தேர்தல் பிரச்சாரப் பணிகளுக்காக வடக்கிற்கு நேற்று விஐயம் செய்துள்ள பிரதமர் தலைமையிலான குழுவினர் யாழில் தங்கியிருந்து பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இன்று காலையில் யாழ் நகரிலுள்ள நாகவ்விகாரைக்கு சென்று விசேட வழிபாடுகளில் ஈடுபட்டார். இதன் போது நாகவிகாரையின் விகாராதிபதியையும் சந்தித்து கலந்துரையாடினார்.