இலங்கை ,யாழ்ப்பாணம் ; யாழ் சித்த போதனா வைத்தியசாலையில் மூலிகை தகவல் மையம் ஆரம்பித்து வைப்பு
பொதுமக்களின் சந்தேகங்களை தீர்த்துவைக்க வைத்திய கலாநிதிகள்
பைஷல் இஸ்மாயில் –
யாழ். கைதடி சித்த போதனா வைத்தியசாலையில் மூலிகைகள் மற்றும் நச்சுத்தாவரங்களை பற்றிய தகவல்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளும்
வகையில் மூலிகை தகவல் மையம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் ஐ.ஜெபநாமக்கணேசன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ் மாவட்டத்தில் காணப்படும் நச்சுத் தாவரங்கள் மற்றும் அவை தொடர்பான விடயங்களை பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகவும்
, அவை தொடர்பான அனைத்து விடயங்களையும் நேரடியாகவும் தொலைபேசியூடாகவும் அறிந்து கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
இது பற்றிய முழுமையான தகவல்களை பொதுமக்களுக்கு வழங்குவதற்காக சித்த மருத்துவ பேரரறிஞர்கள் மற்றும் சித்த மருத்துவக் கலாநிதிகள்
ஆகியோர்களின் வழி காட்டலின் கீழ் மூலிகை தகவல் மையம் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், இன்றைய போக்குவரத்து பிரச்சனை மற்றும் மூலிகை தகவல் மையத்துக்கு வருகை தர முடியாதவர்களின் பிரச்சினைகளையும்
கருத்திற்கொண்டு அவர்களுக்கு எழுகின்ற சந்தேகங்களை 021 – 2057104, 077 0661005 தொலைபேசி ஊடாகவோ அல்லது வட்சப் ஊடாகவோ அல்லது
mpicjaffna@gmail.com மின்னஞ்சல் ஊடாகவோ பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.