யாழ்ப்பாணத்து கணவாய் பிரட்டல்

யாழ்ப்பாணத்து கணவாய் பிரட்டல்
Spread the love

யாழ்ப்பாணத்து கணவாய் பிரட்டல்

யாழ்ப்பாணத்து கணவாய் பிரட்டல் செய்வது எப்படி .கேளே வரப்பியும் காணொளியில் நானம்மா சமையல் காலை நிபுணர் செய்து கண்ணப்பிக்கிறார் பாருங்கள் .


தேவையான பொருட்கள்
கணவாய் 1 கிலோ
வெங்காயம் 2
பச்சைமிளகாய் 3-4
இஞ்சி ஒரு துண்டு 2
உல்லி 4 பல்லு
கறி பவுடர் 3-4 தேக்கரண்டி


தேங்காய் பால் பவுடர் 3 தேக்கரண்டி
கறுவா ஒரு துண்டு
ஏலக்காய் 3-4
கராம்பு 3-4
கறிவேப்பிலை


ரம்பை
உப்பு தேவைக்கு
தேசிக்காய் பாதி
எண்ணெய் 21/2 தேக்கரண்டி

செய்முறை :
முதலில் கணவாயை நல்லா சுத்தம் செய்து எடுக்கவும்.
பின்னர் பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடேற்றவும் அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் பெரிய சீரகம் , ரம்பை , கறிவேப்பிலை போட்டு சூடானதும் பச்சை மிளகாய் , வெங்காயம் சேர்த்து வதக்கவும் .


பின்னர் இஞ்சி பூண்டு சேர்த்து பொன் நிறம் மாறும் வரை வதக்கவும். பின் அதில் கணவாய் சேர்த்து நன்கு கிளறி 10-20 நிமிடம் அவிய விடவும் பின் அதில் உப்பு சேர்க்கவும்.

கணவாய் நன்றாக அவிந்ததும் அதில் கறி தூள் சேர்த்து தூள் வெக்கை போகும் வரை மூடி விடவும். பின் அதில் தேங்காய் பால் சேர்த்து நன்றாக கணவாய் கறி பிரண்டு வரும் வரை வைக்கவும்.


வாசனை திரவியங்களை வறுத்து எடுத்து மிக்ஸ்சி யாரில் போட்டு பவுடராக அரைத்து எடுத்து அதை கணவாய் கறிக்குள் போட்டு இறக்கி பரிமாரவும்.

வீடியோ