
யாழ்ப்பாணத்தில் சஜித் பிரேமதாசா
யாழ்ப்பாணத்தில் சஜித் பிரேமதாசா ,சஜித் பிரேமதாசா ஐங்கயன் திடீர் சந்திப்பு .
இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா யாழ்ப்பாணத்திற்கு திடீர் பயணம் ஒன்றை மேற்கொண்டு இருந்தார் .
அங்கு பாடசாலை கட்டிடம் ஒன்றை திறந்து வைப்பதற்காக சென்ற பொழுது ஐங்காயனை சந்தித்துக் கொண்டார் .
இருவரும் ஒன்றாகச் சந்தித்து அரசியல் நிலவரங்கள் தொடர்பாக பேசப்பட்டதான விடயங்கள் வெளியாக இருக்கின்றன.
பிரேமதாசாவுக்கு அங்கயன் ஆதரவு .
எதிர்வரும் தேர்தலில் சஜித் பிரேமதாசாவுக்கு அங்கயன் யாழ்ப்பாணத்தில் இருந்து மிகப்பெரும் ஆதரவை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகின்றது .
ரணில் அரசாங்கத்தின் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பாக விஜயகலா மகேஸ்வரன் யாழ்ப்பாணத்தை போட்டி போடுகின்றார் .
எனவே அந்த இடத்தை நிரப்புவதற்கு யாழ்ப்பாணத்தில் எவரும் இல்லை ,அதனால் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவாக ,ஐங்கயன் ராமநாதனை களம் இறக்க உள்ளதாக தெரிய வருகின்றது .
இந்த நிகழ்வில் பேசிய அவர்கள் எதிர் வருகின்ற தேர்தலில் தாங்கள் ஒன்று இணைந்து பயணிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர் .
தமிழ் மக்களுக்கு பாரிய நன்மை
அதன் ஊடாக தமிழ் மக்களுக்கு பாரிய பலன்களையும் நன்மைகளையும் தாங்கள் ஏற்படுத்தி தருவோம் என்ற விடயத்தினை அறிவித்துள்ளனர் .
ஆட்சி கட்டில் ஏறும் வரைக்கும் இவ்வாறானவர்கள் இவ்வாறு உரைப்பதும் ,ஜனாதிபதி ஆனதும் ,தமிழர்களை மறந்து அவர்களை எட்டி உதைக்கின்ற நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர் .
ஆண்டாண்டுகளாக ஆளுகின்ற ஜனாதிபதி வர்க்கமும் சிங்கள பெரும்பான்மை இனத்தவர்களும் இவ்வாறு ஈடுபட்டு வருகின்றனர் .
அவ்வாறான ஒரு நிலைக்கு தற்பொழுது சஜித் பிரேமதாசாவும் தள்ளப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தமிழ் மக்கள் சஜித் பிரேமதாசாவை அதிகம் நம்புவதற்கு,பிரேமதாசாபோன்று நல்லெண்ணெத்தை வெளியிட்டு தமிழர்களுக்கு ஒரு தீர்வு ஐயா வழங்குவார் என்பதாக இன்றும் நம்புகின்றனர் .
மேலும் அவர்களும் ஆதரவாக காணப்படுகிறார் .
அவரது சிந்தனைகள் வேறு விதமாக இருக்க கூடும் எனும் தமிழ் மக்கள் நம்புவதே அவருக்கு ஆதரவு அளிப்பதற்காக ,தமிழர்கள் இன்றுவரை முயற்சிகளையும் முன் ஆதரவுகளையும் வழங்கி வருகின்றது குறிப்பிடத்தக்கது .