மோட்டார் சைக்கிள் திருட்டு – சிக்குவார்களா மோட்டார் சைக்கிள் திருடர்கள்
மோட்டார் சைக்கிள் ஒன்றை திருடிய சந்தேகநபர்கள் இருவர், தலைக்கவசம் அணியாமல் திருடிய மோட்டார் சைக்கிளுடன்,நாவலப்பிட்டியிலிருந்து கம்பளை பகுதி நோக்கி சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாவலப்பிட்டி நகர மத்தியில் உள்ள தனியார் நிதி நிறுவனம் ஒன்றுக்கு பின்புறம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று, நேற்று ( 19)
அடையாளம் தெரியாத இருவரால் திருடிச் செல்லப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த மோட்டார் சைச்கிள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடத்துக்கு வருகைத் தந்த சந்தேகநபர்கள் இருவர், தலைக்கவசம் இல்லாமல் கம்பளை பகுதியை நோக்கி, மோட்டார் சைக்கிளைக் கொண்டுச் சென்றுள்ளனர்.
4 இலட்சம் ரூபாய் பெறுமதியான மோட்டார் சைக்கிளைத் திருடிச் சென்ற சந்தேகநபர்களை கைதுசெய்வதற்கான விசாரணைகளை நாவலப்பிட்டி
பொலிஸார் ஆரம்பித்துள்ளதுடன், சந்தேகநபர்கள் மோட்டார் சைக்கிளைத் திருடிச் செல்லும் காட்சிகள், நகரிலுள்ள பல பாதுகாப்பு கமெராக்களில் பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்தனர்.
- தென் கடற்கரையில் இரண்டாவது சரக்குக் கொள்கலன் கரை ஒதுங்கியது

- கெலியோய பேராதெனியாவிற்கு திடீர் வெள்ள எச்சரிக்கை

- ஜெயவர்தனபுர மருத்துவமனையில் தலைமை வெற்றிடத்தால் நோயாளிகளுக்கு ஆபத்து

- கண்டியின் சில பகுதிகளுக்கு நிலச்சரிவு காரணமாக வெளியேற்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- யோஷித ராஜபக்ச மற்றும் கரன்னகோடா மீது குற்றப்பத்திரிகைகள் தாக்கல்







