மொறு மொறு மெது வடை

மொறு மொறு மெது வடை
Spread the love

மொறு மொறு மெது வடை

மொறு மொறு மெது வடை வீட்டில் செய்வது எப்படி செய்முறை விளக்கம் காணொளியில் முழுமையாக பாருங்க மக்களே .

தேவையான பொருட்கள்
2 கப் உளுந்து
சில கறிவேப்பிலைகள்
2 வெங்காயம்
4 பச்சை மிளகாய்
3 காய்ந்த மிளகாய்
பெரிய சீரகம்
உப்பு தேவைக்கு
டீப் ஃப்ரைக்கு எண்ணெய்

செய்முறை:
கழுவிய உளுத்தம்பருப்பை 3 மணத்தியாளம் ஊறவைத்து, விழுதாக அரைக்கவும் அத்தோடு பெரிய சீரகமும் காய்ந்த மிளகாயும் சேர்த்து அரைக்கவும் .

ஒரு பாத்திரத்திற்கு மாற்றி நன்றாக கலக்கவும். நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, உப்பு , பச்சை மிளகாய் சேர்த்து நன்கு கலக்கவும்.

வடை வடிவில் செய்து சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும். மிதமான தீயில் நிறம் மாறும் வரை பொறிக்கவும், பின் எடுக்கவும். சுவையான மொறு மொறு மெது வடை தயார்.