முல்லைத்தீவில் சிறுவன்உட்பட இருவர் பலி

முல்லைத்தீவில் சிறுவன் உட்பட இருவர் பலி
Spread the love

முல்லைத்தீவில் சிறுவன்உட்பட இருவர் பலி

முல்லைத்தீவில் சிறுவன்உட்பட இருவர் பலி முல்லைத்தீவில் 10 வயதுடைய சிறுவன் உட்பட இருவர் உயிரிழந்தமை அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

உடுப்புக்குளத்தில் தோணியில் தாமரைப்பூ பறிக்க சென்ற இருவர் உயிரிழந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (01) அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முல்லைத்தீவு உடுப்புக்குளம் பகுதி

முல்லைத்தீவு உடுப்புக்குளம் பகுதியில் உள்ள குளத்தில் இருவர் தோணியில் தாமரைப்பூ பறிக்க சென்றவேளை தோணி கவிழ்ந்துள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை

இதன்போது தோணியில் இருந்த இருவரும் நீரிற்குள் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில் அளம்பில் தெற்கில் வசிக்கும் 10 வயதுடைய சி.பிரணவன், 25 வயதுடைய இ.நிஷாந்தன் எனும் இருவரே உயிரிழந்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அதே நேரம் ஞாயிற்றுக்கிழமை (01) பிற்பகல் குமுழமுனை ஆலய கேணியை பார்வையிட சென்ற இரு மாணவிகள் கேணியில் தவறி வீழ்ந்து உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.