முதல் -மந்திரி உத்தவ் தாக்கரே மனைவிக்கு கொரோனா

Spread the love

முதல் -மந்திரி உத்தவ் தாக்கரே மனைவிக்கு கொரோனா

மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயின் மகனும், சுற்றுலாத்துறை மந்திரியுமான ஆதித்ய தாக்கரேக்கு கடந்த 2 நாட்களுக்கு முன் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே மனைவிக்கு கொரோனா
ராஷ்மி தாக்கரே
மும்பை:

மராட்டியத்தில் கொரோனாவின் 2-வது அலை அசுர வேகம் எடுத்துள்ள நிலையில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயின் மகனும், சுற்றுலாத்துறை மந்திரியுமான ஆதித்ய தாக்கரேக்கு கடந்த 2

நாட்களுக்கு முன் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இந்தநிலையில் உத்தவ் தாக்கரேயின் மனைவி ராஷ்மி தாக்கரேக்கும் தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இதையடுத்து அவர் முதல்-மந்திரியின் வர்ஷா பங்களாவில் தன்னை தனிமைப்படுத்தி கொண்டு உள்ளார்.

உத்தவ் தாக்கரேயும், அவரது மனைவி ராஷ்மி தாக்கரேயும் கடந்த 11-ந் தேதி மும்பை ஜே.ஜே. அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

இந்தநிலையில் ராஷ்மி தாக்கரே தொற்று பாதிப்புக்கு ஆளாகி உள்ளார். மராட்டியத்தில் புதிய உச்சமாக நேற்று

ஒரே நாளில் 28 ஆயிரத்து 699 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளானார்கள். இதேபோல இந்த ஆண்டில் அதிகப்பட்சமாக நேற்று மேலும் 132 பேர் உயிரிழந்து உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *