மின்னல் தாக்கி 25 பேர் பலி
பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. பாலைவனப்பகுதியான அம்மாகாணத்தின் தார்பார்கர், சங்ஹர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது.
இந்நிலையில், கனமழையின் போது மின்னல் தாக்கி இதுவரை 25 பேர் உயிரிழந்துள்ளனர்.
மின்னல் தாக்கி உயிரிழந்தோர்
மேலும், 16-க்கும் அதிகாமானோர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்த அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இதற்கிடையில், மின்னல் தாக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி ஷா முகமது குரேஷி தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளார்.