மிதக்கும் மனித உடல்கள்- சிரிக்கும் உலகம்
மதவெறியால் இனம் ஒன்று
மரணம் விதைக்குதே – உலக
மன்றுகளும் இதனை கண்டு
மகிழ்வாய் சிரிக்குதே ….
உயிர் ஒன்றை குடிப்பாரை
உதைக்க மறுக்குதே – இந்த
உலக நீதி இதுவாச்சோ
உள்ளம் துடிக்குதே …..
குஞ்சோடே மறைந்து கிடந்தார்
குரலை வெட்டினான் …..
குருதி குடித்து வெறி ஏப்பம் இட்டே
குளறி சுற்றினான் …..
வாரம் ஒன்று கடக்கும் முன்னே
வழி மூவாயிரம் வீசினான் ….
வரலாற்று இன படுகொலையாய்
வாழ்வில் எழுதினான் …..
நீதி உள்ள மாந்தர் எல்லாம
நிரையாய் எழுகவே – நாளை
நீள விரியும் கொலைகள் தடுக்க
நிமிர்ந்தே வருகவே ………
அறம் இன்றி ஆளும் அரசின்
ஆட்சி குலையடா …..
அவலத்தோடே இறந்தார் ஆத்மா
அமைதியாக நிமிரடா …..!
வன்னி மைந்தன் (ஜெகன் )
ஆக்கம் -02/09/2017
கடந்த ஒருவாரமாக மியன்மாரில் புத்த வாதிகளால் நடந்த முஸ்லீம் படுகொலைகள்
கண்டபோது…