மலையக மாணவர்களின் தொழில் கல்வி அபிவிருத்தி சம்பந்தமான செயற்திட்ட கலந்துரையாடல்
மலையக மாணவர்களின் தொழில் கல்வி அபிவிருத்தி சம்பந்தமான செயற்திட்ட கலந்துரையாடல் முன்னால் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி வே.இராதாகிருஸ்ணன் தலைமையில் இந்திய குழுவினருடன் நடைபெற்றது
இந்த கலந்துரையாடலில் விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திருமதி ரஞ்சனி இந்தியாவின் தமிழ் நாட்டை சேர்ந்த திருமதி சசிகலா கொழும்பு மாநகர சபை உறுப்பினர் உமாசந்திர பிரகாஸ் ஜங்கரன் மீடியா சொலுயூசன் பணிப்பாளர் கார்த்திக் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது மலையக மாணவர்களுக்கு அவர்களுடைய கல்வியுடன் கூடிய தொழில் கல்வியை பெற்றுக் கொள்வது எப்படி என்று
திருமதி சசிகலா விளக்கமளித்தார். மாணவர்கள் பங்களிப்பு தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் உள்ள நடைமுறையை போன்று தங்களுடைய கல்வியுடன் தொழில் அனுபவத்தையும் பெற்றுக் கொள்வதற்கு ஏற்ற வகையில் சில வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.