மலையகத்தில் இந்து ஆரம்ப பாடசாலைக்கு வேற்று மத அதிபர் இதற்கு இந்து அமைப்புகள் கண்டனம்

Spread the love

மலையகத்தில் இந்து ஆரம்ப பாடசாலைக்கு வேற்று மத அதிபர்
இதற்கு இந்து அமைப்புகள் கண்டனம்

மத்திய மாகாணம் கண்டி மாவட்டம் கம்பளை கல்வி வலயத்திற்கு உட்பட்ட இந்து ஆரம்ப பாடசாலை ஒன்றுக்கு

தலைமை அதிபராக வேற்று மதம் சார்ந்த ஒருரை அதிபராக நியமித்தமைக்கு மலையத்தின் பல்வேறு இந்து அமைப்புக்கள் கண்டனம் வெளியிட்டு உள்ளனர்.

இந்த கண்டனம் குறித்து அமைப்புகள் வெளியிட்டு உள்ள அறிக்கையில் மேலும் குறிபிட்டுள்ளதாவது. நாங்கள் வேறு

மதங்களுக்கு எதிரானவர்கள் அல்லர் வேறு மதங்களையும் அவர்களின் எண்ணங்களையும் மதிக்கின்றோம். குறிப்பாக

இந்த பாடசாலை இந்து ஆரம்ப பாடசாலையாகும் இதன் பெயரும் இந்து ஆரம்ப பாடசாலையே இந் நிலையில்

இந்துவானவர் இந்த பாடசாலையில் அதிபராக இருக்க வேண்டியது கட்டாயமாகதாகும். 90 சதவீதமான இந்து மாணவர்களே இங்கு கல்வி கற்கின்றார்கள்.

இந்த பாடசாலையில் நடக்கும் அனைத்து விடயங்களுக்கும் சமயம் சார்ந்த செயற்பாடுகளுக்கும்; அதிபரே முன் நிற்க

வேண்டும். சரஸ்வதி பூஜை மற்றும் மாணவர்களுக்கான வித்தியாரம்பம் போன்றவற்றுக்கு அதிபரே

முதன்மையானவர். இவரே இதனை முன் நின்று நடாத்த வேண்டும். இதற்கு இந்துவானரே பொருத்தமானவர்.

மலையகத்தில் இந்து ஆரம்ப பாடசாலைக்கு வேற்று மத அதிபர் இதற்கு இந்து அமைப்புகள் கண்டனம்

இவற்றுக்கு எல்லாம் வேர் ஒருவரை நியமிக்க முடியாது. பொதுவாக பிரதேச பெற்றோர்கள் பாடசாலைக்கு சென்று

தலைமை அதிபரிடமே தங்கள் பிள்ளைகளுக்கு எடு துவக்கவும் விரும்புவார்கள். இவ்வாறான நிலையில் இந்து அற்ற ஒருவர் இதனை எவ்வாறு செய்வார்.

குறிப்பாக எந்த ஒரு பாடசாலைக்கும் தலைமை அதிபர் ஒருவர் நியமிக்கும் போது அந்த பாடசாலையின்

மாணவர்களின் பெருபாலனவர்களின் மதத்திற்கு முன்னுரிமை வழங்க வேண்டும். அது எந்த மதமாக

இருந்தாலும் பரவாயில்லை இதே போல் வேறு மதங்களை கொண்ட பாடசாலைகளுக்கு இந்து அதிபர் ஒருவரை

நியமிக்க முடியுமா. இதனை யாரும் ஏற்றுக் கொள்வார்களா. இவ்வாறான நிலையில் இந்து பாடசாலை ஒன்றுக்கு வேற்று

மதத்தை சேர்ந்தவரை நியமித்தமைக்கு நாம் கண்டனம் தெரவிக்கின்றோம். இந் நிலையில் சம்பந்தபட்ட கல்வி

அதிகாரிகள் இதற்கு உரிய மாற்று நடவடிக்கையை எடுக்க வேண்டும். நாட்டில் நல்லினக்கம் சமாதனம் நிறைந்த புதிய

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவர்களின் ஆட்சி நடைபெற்று வருகின்றது. இதில் இனங்களுக்கும்

மதங்களுக்கும் இடையில் முறுகள் நிலைகள் ஏற்படும் வகையில் அதிகாரிகள் பொறுப்பு இன்றி நடந்துக் கொள்ள

கூடாது. நன்கு சிந்தித்து சமூக நோக்குடன் செயற்ட வேண்டும். குறிப்பாக படித்தவர்கள் படித்தவர்கள் போல்

செயற்பட வேண்டும். என்று மேலும் அவர்களின் அறிக்கையில் கூறியுளள்னர்.

இந்த விடயம் தொடர்பில் பொருப்பான கம்பளை கல்வி வலையத்தின் கல்வி அதிகாரிகளை தொடர்பு கொண்ட

போது. இந்த நியமனத்திற்கும் தாங்களுக்கும் எந்த விதமான பொருப்பும் இல்லை. நாங்களும் இதனை பொருத்தமானது

அல்ல என்று தான் கூறுகின்றோம். இந்த நியமனத்தை எங்களிடமும் கேட்காமல் மத்திய மாகாண கல்வி

திணைக்களமே வழங்கியுள்ளது. நாங்கள் இந்த வலயத்திற்கு பொருப்பானவர்களாக இருக்கும் நிலையில்

மாகாண கல்வி திணைக்களம் பொருப்பற்ற வகையில் செயற்பட்டு வருகின்றது. இதற்கு காரணம் தமிழ் கல்வி

அமைச்சு இல்லாததும் தமிழ் பிரிவிற்கு அதிகாரிகள் பொருத்தமான இல்லாததும் தமிழ் பிரிவை யாரும் கண்டுக்

கொள்ளத நிலையுமாகும். இந் நிலை தொடருமானால் அடுத்த மாகாண சபை தேர்தல் நடைபெற்று எமக்கு என்னு

ஒரு தமிழ் கல்வி அமைச்சு கிடைத்து எமது மலையக கல்வியை அபிவிருத்தி செய்வதற்கு முன் பாதி இல்லாமல் போய்விடும் போல் இருக்கின்றது என்று கூறினர்.

மலையகத்தில் இந்து ஆரம்ப பாடசாலைக்கு வேற்று மத அதிபர் இதற்கு இந்து அமைப்புகள் கண்டனம்

எது எவ்வாறாயினும் தற்போது நாட்டில் ஏற்பட்டு உள்ள அரசியல் ஸ்தீரமிண்மை காரணமாக மாகாண அமைச்சுகள்

இல்லாததினால் இவ்வாறான நிலைகள் தோன்றி உள்ளன மத்திய மாகாணத்தை பொருத்த வரையில் மலையத்தின்

கல்விக்கு முக்கியமான ஒன்றாகும். மாகாண தமிழ் கல்வி அமைச்சு மலையக கல்வியில் முக்கியம் பெருகின்றது.

இதன் செயற்பாடுகள் தற்காலிகமாக இல்லாததினால் மலையக கல்வியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனை

கவனத்தில் கொண்டு செயற்பட வேண்டியது அனைவரினதும் கடைமையாகும்.

மலையகத்தில் இந்து ஆரம்ப

Spread the love