மர்மமான உலோக பொருள் ருமேனியாவில் கண்டுபிடிப்பு


மர்மமான உலோக பொருள் ருமேனியாவில் கண்டுபிடிப்பு

அமெரிக்காவின் யூட்டா மாகாணத்தில் காணப்பட்டதைப் போன்ற மர்மமான உலோக பொருள் ருமேனியாவில் ஒரு மலைப்பாதையில்

கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுஉலோக பொருள்புக்கரெஸ்ட்:

கடந்த புதனன்று, அமெரிக்காவிலுள்ள யூட்டா  பாலைவனத்தில் திடீரென 12 அடி உயர உலோகத்தூண் ஒன்று நிறுத்தப்பட்டிருப்பது குறித்த தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

அரசாங்கம் அதை ரகசியமாக வைக்க முயன்றபோதும், அது குறித்து அறிந்துகொண்ட மக்கள் அபாயங்களையும் தாண்டி அந்த பாலைவனத்துக்கு சென்று அந்த மர்மத்தூணை புகைப்படம்

எடுக்கும் முயற்சியில் இறங்கினர்.ஆனால், வெள்ளிக்கிழமை அந்த தூண் அந்த இடத்திலிருந்து மாயமாகியிருந்தது, அதற்கு பதிலாக, அங்கே ஒரு முக்கோண தகரம் மட்டுமே இருந்தது.அந்த தூணை

அங்கே நிறுவியது யார், வேற்றுகிரகவாசிகளா என்பது போன்ற கேள்விகள் எழும்பி அவற்றிற்கு பதில் கிடைக்கும் முன்னரே, அதை அகற்றியது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இன்னொருபக்கம், அந்த தூண் 2015, 2016 வாக்கிலேயே அதே இடத்தில் இருந்ததாக கூகுள் செயற்கைக்கோள் புகைப்படங்களிலிருந்து தெரியவந்துள்ளது.இந்நிலையில், அந்த தூண் மாயமான பரபரப்பு அடங்குவதற்குள், ருமேனியா நாட்டில்

அதே போல் ஒரு உலோக தூண் திடீரென தோன்றியுள்ளது. அதன் உயரம் 13 அடி.இவையெல்லாம் என்ன, எங்கிருந்து வருகின்றன, உண்மையிலேயே வேற்றுகிரகவாசிகள் தான் இவற்றை பூமியில்

வீசினார்களா…?  அல்லது யாராவது வேண்டுமென்றே மக்களை பரபரப்பாக்குவதற்காக இப்படி செய்கிறார்களா என்பது போன்ற கேள்விகளுக்கு பதில் இல்லை.

மேலும் இந்த தூண்கள் தனியார் நிலத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், அது பாதுகாக்கப்பட்ட தொல் பொருள் ஆய்வு நடக்கும் இடத்திலும் அமைந்துள்ளது.யாராவது அப்படி பாதுகாக்கப்பட்ட இடத்தில் ஒரு தூணை

அமைக்கவேண்டுமானால், அவர்கள் அரசின் கலாச்சாரத்துறையிடம் அனுமதி பெற்றிருக்கவேண்டும் என்பதால், அந்த தூண் குறித்த விஷயம் மர்மமாகவே உள்ளது