
பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகிய நபர் ஒருவர் வைத்தியசாலையில்
ரன்மினிதென்ன பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகிய நபர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திஸ்ஸமஹாராம, ரன்மினிதென்ன பிரதேசத்தில் வசிக்கும் 30 வயதுடைய நபரே காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று அதிகாலை ரன்மினிதென்ன பிரதேசத்தில் பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று சுற்றிவளைப்பை மேற்கொண்டதுடன், சந்தேக நபரை கைது செய்ய முற்பட்ட போது, பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் அவரது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளது.