பேசும் காதல் …!

பேசும் காதல்

பேசும் காதல் …!

ஏங்க வைத்து ஏங்க வைத்து
ஏன் கிளியே போனாய்
எந்த நாட்டு செய்மதியில்
என்னை தேடி அலைந்தாய்

உலக நாட்டு உளவுத்துறை
உன்னை தேடுதோ …?- என்
உள்ளத்திலே நீ இருந்தாய்
காணவில்லையே …?

வானிருக்கும் காலம் மட்டும்
நீ இருப்பாய்
வாழும் வரை எந்தன் நெஞ்சில்
நீ உயிர்ப்பாய்

நீ தந்த நினைவுகளை
நான் மறவேன்
நீ இட்ட முத்தங்களை
நான் சுவைப்பேன்

உந்தன் மடி இன்றுவரை
நெஞ்சம் தேடும்
அந்த மடி உறங்கிவிட
ஆயூள் வேண்டும்

நீ இருக்கும் காலத்திலே
நான் இறக்க வேண்டும் – உன்
நீர் விழியை பார்க்க முன்னே
நான் மறைய வேண்டும்

நான் இல்லா காலத்திலே
என் செய்வாயோ ..?
நீ அழைத்தும் வரமாட்டேன்
என் செய்வாயோ …?

உடல் மட்டும் விழி
முன்னே காண மாட்டேன்
உள்ளத்திலே நீ இருக்க
கலங்க மாட்டேன்

இறக்கும் வரை உன்னுடனே
நான் வாழ்வேன்
இது தானே என் காதல்
புனிதம் என்றேன்

வன்னி மைந்தன்
ஆக்கம் 12-01-2021

பேசும் காதல்
பேசும் காதல்
Spread the love