பூ புனித விழா இதுவோ ..?
மங்கை குளித்தல்
மறைந்து பார்த்தல் …
குற்றம் என்றே
குரலை உயர்த்தும் ….
தங்க மேனிகள்;
சங்கதி கேளீர் …
என்ன கேடிது
என்ன உரைப்பீர் …?
உடைந்த பூவை – தொட்டி
உலையில் இருத்தி …
நீரை அள்ளி
நிரையில் வார்ப்பார் ….
ஒட்டிய உடையில்
ஓவென்று தெரிய…
காட்டியே நிற்பாள்
காணா நிற்பார் ….
குமரி குளிப்பதை
கூடியே பார்க்கும் …
பூ புனித விழா இதுவோ ..?
பூ பார்க்கும் விழா இதுவோ ..?
ஏதடா மனிதா
என் செயல் இதுவாம் …?-அவள்
குளித்தலை பார்த்தான்
குற்றம் இல்லையோ …?
முட்டாள் மனிதா – உன்
மூளை கழுவு …..
சட்டம் உரைப்பவர்
சாக்கடை வீசு ….!
வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -06/06/2019