புலிச் சின்னம் அணிந்த இளைஞனின் விடுதலையில் அமைச்சர் டக்ளஸ் கரிசனை
தடைசெய்யப்பட்ட புலிகள் அமைப்புடன் சம்மந்தப்பட்ட ரீசேர்ட் அணிந்திருந்தமையினால் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள இளைஞனின் விடுதலை தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள இளைஞனின் பெற்றோர் இன்று(01.12.2023) அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து தங்களின் குடும்ப நிலையை எடுத்துக்கூறியதுடன், மகனின் விடுதலைக்கு உதவுமாறும் கேட்டனர்.
இந்நிலையில் உரிய தரப்புக்களுடன் கலந்துரையாடிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அவர்களுக்கு நிலமைகளை எடுத்துக்கூறினார்.
இதனையடுத்து, குறித்த இளைஞனின் பெற்றோருக்கு நம்பிக்கையளித்த அமைச்சர், சஞ்சலமடைந்து தேவையற்ற பண விரயங்களை செய்யாமல் பொறுமையாக இருக்குமாறும் ஆறுதல் தெரிவித்து அனுப்பி வைத்தார்.
புலிச் சின்னம் அணிந்த இளைஞனின் விடுதலையில் அமைச்சர் டக்ளஸ் கரிசனை
கடந்த 27 ஆம் திகதி சில அரசியல் தரப்புக்களினால் மாவீரர் நாள் கொண்டாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், கொடிகாம பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்விற்கு சென்ற
அப்பிரதேசத்தினை சேர்ந்த யூட் சுரேஸ்குமார் டனுஜன்(வயது – 23) என்ற இளைஞன் தடைசெய்யப்பட்ட புலிகள் அமைப்பின் தலைவரின் புகைப்படம் புலிச் சின்னம் ஆகியவை பொறிக்கப்பட்ட ரீசேர்ட் அணிந்திருந்தார்.
இதனடிப்படையில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள குறித்த இளைஞன், நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
- இலங்கையில் டெங்கு மரண எண்ணிக்கை 71 ஆக உயர்வு
- எல் நினோ வறண்ட வானிலை ஏழு மாவட்டங்களில் 81 000 மக்கள் பாதிப்பு
- மேகசின் சிறைக்குள் ரீசார்ஜ் செய்யக்கூடிய பேட்டரிகளை வீச முயன்ற சந்தேக நபர் கைது
- ரஷ்ய தாக்குதலில் 13 பேர் பலி
- நான்கு வங்கி அதிகாரிகள் கைது
- சிலாவில் படகு விபத்தில் மீனவர் காணாமல் போனார்
- சிரிய விமானப்படைத் தளம் மீதான இஸ்ரேலியத் தாக்குதல் சர்வதேச சட்டத்தை மீறுவதாக பஹ்ரைன் கூறுகிறது
- காசா உதவிப் பணியாளர் கொலை தொடர்பாக இஸ்ரேலிய தூதரை ஆஸ்திரேலியா அழைத்தது
- ஈரானுக்கு எதிராக அமெரிக்கா ‘பொருளாதாரப் போரை’த் தொடங்குகிறது
- ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேலின் E1 குடியேற்ற விரிவாக்கத்தை பிரிட்டன் கண்டிக்கிறது
















