புலிகளின் முகாமில் ஆயுதங்கள் மீட்பு

Spread the love

புலிகளின் முகாமில் ஆயுதங்கள் மீட்பு

மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள கதிரவெளி பிரதேசத்தில் முன்னாள் விடுதலைப் புலிகளின் முகாமான ஜீவன் முகாம் அமைந்துள்ள பகுதியிலிருந்து பெரும்

திரளான ஆயுதங்கள் இன்று (16) வெள்ளிக்கிழமை விசேட அதிரடிப்படையினர் வாழைச்சேனை நீதிமன்ற மேலதிக நீதவான் ரி.கருணாகரன் முன்னிலையில் மீட்டுள்ளனர் என வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.

வாழைச்சேனை கடதாசி ஆலை இராணுவு புலனாய்வு பிரிவினரின் தகவலுக்கு அமைய விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸாருடன் இணைந்து வாழைச்சேனை

நீதிமன்றத்தில் நிலத்தை தோண்டுவதற்கு அனுமதியை கோரியதையடுத்து நீதவான் அனுமதிவழங்கினார்.

புலிகளின் முகாமில் ஆயுதங்கள் மீட்பு

இதனையடுத்து சம்பவதினமான இன்று (16) திங்கட்கிழமை வாழைச்சேனை மற்றும் வாகரை நீதிமன்ற நீதவான் ரி.கருணாகரன் முன்னிலையில் குறித்த முகாம் அமைந்துள்ள பகுதியின் நிலத்தை மண் அகழ்வும் இயந்திரம் கொண்டு அகழ்ந்தனர்.

இதன் போது அங்கு நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த பெரும் அளவிலான துப்பாக்கி ரவைகள் மற்றும் வெடிபொருட்களை மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்த வாகரை பொலிஸார்.


மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்தனர்.

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *