புலமை பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்கள்கௌரவிப்பு


புலமை பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்கள்கௌரவிப்பு

புஸ்ஸல்லாவ ஸ்ரீ கல்கி மாணவ சேவா சமித்தியின் ஏற்பாட்டில் மத்திய மாகாணம் கம்பளை கல்வி வலையம் கொத்மலை கல்வி வலையங்களில் 2019 தரம் ஐந்து புலமை

பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களையும் 2019 க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற

மாணவர்களையும்; பல்கலைகழகத்திற்கு தெரிவான மாணவர்களையும் கௌரவிக்கும் நிகழ்வு இம்பொடை தொண்டமான் கலாசார நிலையத்தில் நடைபெற்றது (12)


காரியவான் ஐ.வி.எஸ். விஜயன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் 52 பாடசாலைகளை சேர்ந்த 580 தரம் 05 மாணவர்களும் 26 பாடசாலைகளை சேர்ந்த க.பொ.த

சாதாரண தரம் மற்றும் உயர்தர 380 மாணவர்களும் 26 பல்கலைகழகத்திற்கு தெரிவான மாணவர்களும் கௌரவிக்கபட்டதுடன் இவர்களுக்கான கற்றல்

உபகரணங்களும் பல்கலைகழக மாணவர்களுக்கான உதவு தொகையும் வழங்கபட்டதுடன் இந்த மாணவர்களின் வெற்றிகளுக்கு காரணமாக இருந்த ஆசிரியர்கள்

புலமை பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்கள்கௌரவிப்பு

பாடசாலைகளின் அதிபர்களும் கௌரவிக்கபட்டனர். இதன் போது சிறந்த பெறுபேறுகளை பெற்ற பாடசாலைகளுக்கு கல்விக்கான கல்கி விருதுகளும் வழங்கப்பட்டன.

நிகழ்வில் பாடசாலை மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் அதிதிகளின் உரைகள் சொற்பொழிவுகள் அதிதிகள் கௌரவிப்புகள் ஆகிய நடைபெற்றன.

இரண்டு அமர்வுகளாக நடைபெற்ற இந் நிகழ்வில் முதல் அமர்வான 2019 தரம் ஐந்து புலமைபரிசில்பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களை

கௌரவிக்கும் நிகழ்விற்கு பிரதம அதிதியாக வர்த்தகர் திரு தி.இராமநாதனும் இரண்டாம் அமர்வான 2019 க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தரத்தில் சிறந்த

பெறுபேறுகளை பெற்றவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்விற்கு பிரதம அதிதியாக இந்து ஸ்வயம் சேவா சங்கத்தின் ஒருங்கினைப்பாளர் இரா.இராதாகிருஸ்ணன்

அவர்களும் கலந்துக் கொண்டனர். இந் நிகழ்வுகளுக்கு சிறப்பு அதிதிகளாக கம்பளை மற்றும் கொத்மலை கல்வி வலையங்களின் கல்வி அதிகாரிகள் பாடசாலைகளின்

அதிபர்கள் கொழும்பு தேசிய மக்கள கழகம் உட்பட சமூக ஆவலர்கள்¸ புத்தி ஜீவிகளும் கலந்துக் கொண்டதுடன்

நிகழ்வில் ஆசிரியர்களும் மாணவர்களும் பெற்றோர்களும் கலந்துக் கொண்டார்கள்.

புலமை பரிசில் பரீட்சையில் சிறந்த
புலமை பரிசில் பரீட்சையில் சிறந்த